சனி, 8 ஜனவரி, 2022

விருந்தினருக்கும் பரமவிருந்து

*விருந்தினருக்கும் பரமவிருந்து*

by : Eddy Joel Silsbee

 

ஆராதனைக்கு ஒரே பாத்திரமான நம் பரலோக பிதாவின் நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

உங்களுக்காக *நான் ஜெபிக்கிறேன் என்று டமாரம் அடித்து விளம்பரம்* தேடிக்கொள்ளும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது என்பதால்;

 

ஜெபம் பண்ணும்பொழுது தன் அறையை *பூட்டிக்கொண்டு உள்ளே அந்தரங்கமாக* ஜெபிக்க சொன்னார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. மத். 6:6

 

இரகசியமாய் ஏறெடுக்கும் ஜெபம் வெளியரங்க பதில் பெற்று தருகிறது. மத். 6:6

 

திடீரென்று புதியவரின் வருகையால் ஜெபத்திற்கு தடைவராமலிருக்கும்படி கதவை பூட்டிக்கொள்ளச் சொன்னார் கிறிஸ்து. இக்காலங்களில் கைபேசியையும் அனைத்து விட்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தால், ஜெபித்து முடிக்கும் வரை எந்த தடைகளும் இல்லாமல் கவனம் சிதறாமல் ஜெபிக்கமுடியும்.

 

தொழுகைக்கு புறப்படும் நேரத்தில் விருந்தினராக இரட்சிக்கப்படாதவரே நம் வீட்டிற்கு வருவர். அவர்கள் நிமித்தம் சொந்த இரட்சிப்பை இழப்பதைவிட, அவர்களையும் கூடுகைக்கு கூட்டிச் செல்லும்போது கூடுதலாக சமாரியனுக்கு கிடைத்த வெகுமதி போல நீங்களும் பெறலாம். லூக்கா 17:19

 

கம்பெனி முதலாளி அழைத்தால் நேரம் காலம் பாராமல் விழுந்து பிடித்து ஓடுவதற்கு முற்படும்பொழுது, பரலோக தேவனின் கட்டளைக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்கிறோம்?

 

ஜெபத்திற்கும், ஆராதனை பங்களிப்பிற்கும் ஒரு போதும் சாக்கு போக்கு சொல்லவேண்டாம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/xW1gdI9KbJ0

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக