*பொறாமையை தாங்கி செல்லக்கூடாது*
by : Eddy Joel Silsbee
அன்பின் ஆண்டவராகிய நம் இயேசு இராஜாவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
லேசான பொறாமையை,
நாள் கடந்து கூடவே தாங்கி செல்லும் போது,
அந்த பொறாமையானது எரிச்சலாக மாறி சொந்த சமாதானத்தையே குலைத்துபோடும்.
தேவன் நமக்கு கொடுத்தது போதும் என்றிருந்திருந்தால் காயீன் கொலைக்காரனாகியிருக்கமாட்டான்.
சமாதான ஆண்டவர் வாசலில் நியாயத்தீர்ப்பு கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார். யாக். 5:9
வைராக்கியமும், கோபமும், பொறாமையும், எரிச்சலும் – உலக வாழ்கையையும், ஆன்மீக வாழ்க்கையையும் வீணாக்கிவிடும். யாக். 3:16
மற்றவரிடமுள்ள நமக்கு பிடிக்காததை;
நம் இருதயத்தில் தாங்கும் போது - சொந்த இருதயம் தான் பாழாகும்.
அது நாளடைவில், பொறாமையாகவும், விரோதமாகவும் மாறி சொந்தக்குடும்ப சமாதானத்தையே கெடுத்துப்போட்டுவிடும்.
நமக்கென்று தேவன் கொடுத்த;
தன்மையும், அன்பும், கிருபையுமே நமக்கு மேன்மை என்றெண்ணி *நன்மையையும் சத்தியத்தையும் பற்றிக்கொள்வோம்*.
சகலவற்றையும் தேவன் நமக்கு ஆசீர்வதிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக