வெள்ளி, 21 ஜனவரி, 2022

நினைப்பதொன்று செய்வதொன்று

*நினைப்பதொன்று செய்வதொன்று*

by : Eddy Joel Silsbee

 

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை வழி  நடத்துவாராக.

 

துன்பத்தோடு எவரும் பிறப்பதும் இல்லை,

வாழ்க்கையை துன்பத்தோடு துவக்குவதும் இல்லை. 

 

ஆனால்,

குடும்பத்தில் சந்தோஷம் குறைந்து,

துக்கமும் பிரச்சனைகளும் வந்ததின் காரணம் என்ன?

 

சந்தேகம் வந்தது,

வைராக்கியம் கூடியது,

அன்பு குறைந்தது,

மேட்டிமை வந்தது,

வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றதை போல உணர்வு வந்ததும் - குடும்பத்தில் சந்தோஷம் தானாக பறந்தது !!

 

தான் அன்புள்ளவன் என்று *சொல்லிக்கொள்வதை* விட,

எந்த சூழ்நிலையிலும் *அன்பை வெளிப்படுத்துவோம்* - அப்போது அனைத்து சந்தோஷமும் மீண்டு வரும்.

 

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளைநீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்... (லூக். 19:42) என்று எருசலேமைக் குறித்து இயேசு கிறிஸ்து வினவினார்.

 

ஆம்… முழுவதுமே அழியப்போவதை அறியாமல் இஸ்ரவேலர்கள் மமதையில் இருந்தார்கள்.

 

அதுபோல,

சுயநிலைமையை அறியாமல்,

சதா மற்றவர்களை சுட்டிக்காட்டுவதை விட்டு;

சொந்தக் குடும்பத்திலும்,

தேவனுடைய தொழுகையிலும்,

சுயவிருப்பத்தை நிறைவேற்றாமல் தேவனுக்கு உகந்தபடி செயல்படுத்தினால் நம்மை படைத்தவரே நம்மை பாதுகாப்பார்.

 

மேலும் கீழும் குதித்தாலும், ஆக்ரோஷமாக கத்தினாலும் விதிமீறல் தான். 2தீமோ. 2:5

 

பரிசுத்தவான் ட்ரெஸ் என்று நினைத்துக்கொண்டு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் விளையாட தயாராக வேண்டாம். வெளி. 7:14

 

தேவபயம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரிந்திருப்பது அவசியம்.

 

இந்நாளின் சிந்தனைக்கென சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன்:

 

அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். உபா. 5:29

 

அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். உபா. 32:29

 

அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். சங். 95:7-8

 

மற்றவர்களை குறைசொல்வதற்கு முன் சுய வாழ்வை பரிசோதனை செய்வது அவசியம். தேவனுக்குப் பயந்திருப்போம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/QftTHKSAZRg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக