*சுய சரீரத்தையே கட்டுபடுத்த முடியாதவர்கள் வசனத்திற்கு எப்படி கீழ்படியமுடியும்?*
by : Eddy Joel Silsbee
நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கூனிக்குறுகி இரகசியமாக சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், *“விவாகரத்து”* என்பதை வெளிப்படையாக சொல்வது தற்காலங்களில் நாகரீகமாகி விட்டது.
*ஒருவர் உயிரோடு இருக்கும் போதே*,
*விட்டு பிரிந்தவர்*,
*வேறொரு திருமணம் செய்தால்*,
அவரை *“விபசாரக்காரர்”* என்று வேதம் சொல்கிறது. ரோமர் 7:3, மாற்கு 6:11-12
வேசித்தனத்தில் பிடிபட்ட காரணத்தை தவிர வேறு எவரும் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து செல்ல அனுமதியில்லை. மத். 19:9
மிகவும் விசனபடுத்தக்கூடிய கஷ்டமான வார்த்தை தான் (மத். 19:11) ஆனால், இதுவே என்றென்றும் மாறாத நம்மை *நியாயந்தீர்க்கும் பரலோக சட்டம்*.
தேவனுடைய வார்த்தை உருவ குத்துகிறதும் சீர்படுத்துகிறதுமாய் இருக்கிறது.
நித்திய ஜீவனை இழந்து போவதைக்காட்டிலும், வாழ்க்கைத் துணையின் புரிதலை அறிய முற்படவேண்டும். எபி. 3:12
கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் மிகுந்த கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவர். சங். 103:8
பொறுமையோடும் சாந்தத்தோடும் தேவனிடம் மன்றாடும் போது சகலத்தையும் சீர்படுத்துவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/UIe-g5TlJM8
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக