ஞாயிறு, 2 ஜனவரி, 2022

எச்சூழ்நிலையிலும் அன்பை கூட்டி வழங்குவோம்

*எச்சூழ்நிலையிலும் அன்பை கூட்டி வழங்குவோம்*

by : Eddy Joel Silsbee

 

புதிய பெயரால் நம்மை அழைத்த  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஜெப கூடுகையை விட்டு வீட்டிற்கு வந்ததும் அதே பழைய நினைப்பும், வைராக்கியம், கசப்பு, வீராப்பு, வீம்பு, கோபம், வெறுப்புகள் என்று அனைத்தையும் பிசாசு ஞாபகப்படுத்துவான்.

 

புதிய வருஷத்தில் எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருக்க எல்லா வகையிலும் இடைஞ்சல்கள் வரும்.

 

தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார் என்கிறதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

பிறர் நம்மை காணும் போது, நம்மில் ஏற்படும் மாற்றத்தை *அவர்கள்* உணரட்டும்.

 

சாந்தமும், பொறுமையும், அமைதலும் *இக்கட்டின் போது மாத்திரமே* அவசியப்படுகிறது.

 

லேசான புன்முறுவல் சகலத்தையும் மாற்றிவிடும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம் பெலன். நெகே. 8:10

 

சகல அன்பையும் *கூட்டி* வழங்குங்கள். 2பேதுரு 1:7

 

கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசா. 62:3

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/e8XnzT01iiI

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக