புதன், 19 ஜனவரி, 2022

இரகசியச் செயலை தேவன் அம்பலப்படுத்துவார் !


 

*இரகசியச் செயலை தேவன் அம்பலப்படுத்துவார்*

by : Eddy Joel Silsbee

 

சகல நாட்களிலும் நம்மோடிருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அனைத்து பக்கங்களிலும் நம்மை அணைத்து பாதுகாக்கிறவர். 

 

எப்பக்கமும் பாதுகாவலோடு இருக்கவேண்டும் என்பதில், நம் பிதாவானவர் நம் மீது கவனமாஇருக்கிறார்.

 

(1) *முற்புறத்திலும்*

(2) *பிற்புறத்திலும்* நம்மை நெருக்கி, அவர் கரத்தை நம்

(3) *மேல்*

வைக்கிறார் (சங். 139:5)

 

(4) விமானத்திலும்,

(5) ராக்கெட்டிலும் பறந்தாலும், நம் கூடவே வருகிறவர்.

(6) கப்பல் ஏறி சமுத்திரத்தில் போனாலும் அங்கேயும் நம்மோடு இருப்பவர் (சங். 139:8-9)

 

அடையாளம் கண்டுக்கொள்ள சொந்தக்காரர் எவரும் இல்லை;

தவறு செய்தால் அதை ஊரில் பரவி அவமானப்படுத்த எவரும் இல்லை;

ஏன் என்று கேள்வி கேட்க எவருக்கும் அதிகாரம் இல்லை,

சகல அதிகாரமும் தனது கையில் இருந்தது.

எவரும் காணமுடியாத தனிமையான சூழ்நிலையும் இருந்தது..

ஒருநாள் அல்ல, ஒருமுறையல்ல;

பலமுறை, பலநாட்களாய் வலியுறுத்தி பிரியமாய் கட்டியணைக்க அழகான பதுமையின் ஆதரவும் இருந்தது !!

 

இப்படி சகல சூழ்நிலையும் தனக்குச் சாதகமாக இருந்தபோதும்;  யோசேப்பு சொன்னார் *”தேவன் என்னைக் காண்கிறார்”* என்று !! .. ஆதி. 39:4-12

 

இரகசியமான அனைத்தையும் தேவன் அறிகிறவர் !! மத். 10:26

 

எங்கிருந்தாலும் தேவனுக்கு பயந்து, அவர் கட்டளைபடி நடப்போம்.

 

உத்தமத்தில் நடக்கும் எவரையும் தேவன் ஆசீர்வதிப்பார். 2சாமு. 22:31

 

மேடையில் ஒன்றும் தனிமையில் வேறொன்றாகவும் செயல்படும் வேஷம் - கிறிஸ்தவருக்கு வேண்டாம்... தேவன் அதை அம்பலப்படுத்துவார் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/Y_Y3KxMReCs

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக