*பெரியவருக்கு எங்கே மரியாதை?*
by : Eddy Joel Silsbee
அதிகமாய் நேசிக்கும் நம் பரம பிதாவின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
நியாயப்பிரமாணத்தில், அடிப்படை மனித ஒழுக்கத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையாய் கொடுத்தார் தேவன்.
நம் சகல அனுதின நடவடிக்கைகளையும் சிட்சிக்கும் தேவன் கவனிக்கிறவர். சிட்சை என்றால் ஒழுக்கம்.
இவ்வகை ஒழுக்கத்திற்கான கட்டளைகள் நம் கலாசாரத்திலும் உண்டு.
அவைகளை விட்டுவிடாதிருப்போம்.
நவீன தலைமுறை அல்லது இளம் தலைமுறை என்ற காரணம் காட்டி,
பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தள்ளிவிடக்கூடாது.
நாகரீகம் என்ற பெயரில் அவர்கள் முன்பு கால் மேல் கால் போட்டு கொண்டு இருப்பது,
எடுத்தெறிந்து பேசுவது என்றில்லாமல்,
அவர்களுக்கு நாம் தகுந்த மரியாதையை கொடுக்கிறோமா என்று *தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார்*.
*“நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்”*. லேவி. 19:32
வயது முதிர்ந்தவர்களை கனப்படுத்துவதென்பது தேவனுக்கு பயப்படுவதாகும் !!
நான் உங்களை ஆளுகிறவர், ஆகவே என் சொல்படி செய்யுங்கள் என்று அவர் வலியுறுத்துவதை கவனிக்கவேண்டும்.
மனிதரில் வயதானோரை மதிப்பதில்லை என்பது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் சர்வத்திற்கும் மேலான தேவனுக்கும் மதிப்பளிப்பதில்லை !!
என் நாமத்தினாலே இரண்டு அல்லது மூன்று பேர் கூடினாலும் நான் அங்கு இருக்கிறேன் என்று சொல்லியிருந்தும் (மத்.18:20);
தேவன் நம் மத்தியில் இருக்கிறார் என்றறிந்த பின்பும்;
எந்த பயமுமின்றி,
செய்யாதே என்று வேதத்தில் கட்டளையாக சொல்லியிருந்தும், துணிகரமாய் போடும் கூச்சலும், குதித்தலும், உளறுதலையும் விட்டு (1கொரி. 14:26-28) *தேவனுக்கு பயப்படுவது அவசியம்*.
தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் பக்குவப்படுத்துவாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/vpcQ3Dy8hrc
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக