சனி, 15 ஜனவரி, 2022

படபடாவென்று பேசினால் வெகுளியா?


 

 

*படபடாவென்று பேசினால் வெகுளியா?*

by : Eddy Joel Silsbee

 

சாந்தத்தின் ஆவியை நமக்கு கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

–பட படாவென்று எல்லாவற்றையும் கொட்டி தீர்க்கிறவர்கள், “நாங்க எங்க மனசுல எதுவுமே வச்சிக்க மாட்டோம்”, எங்கள் இருதயம் சுத்தம் என்றும்;

 

- ஒன்றுமே பேசாமலிருப்பவர்களை நம்பவேக்கூடாதென்றும் உலகம் சொல்லுகிறது..

 

இந்த கூற்றுக்கு வேதம் சொல்லுகிற பதில் கீழே ஆச்சரியத்தை தரும்... !!

 

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். நீதி. 21:23

 

சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். நீதி. 10:19

 

...வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். பிர. 5:3

 

மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான்... பிர. 10:14

 

... யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்... இருக்கக்கடவர்கள்; யாக். 1:19

 

அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். நீதி. 17:27

 

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.. யாக். 1:26

 

இவ்வளவு வசனங்கள் போதும் என்று நினைக்கிறேன்..

 

ஆகவே, படபடவென்று கொட்டி தீர்க்காமல் அளவாய் அவசியத்திற்கு பேசுவதேசகலத்திலும் நன்மை என்றறிவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/ND1bcvxaZJU

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக