*இரகசியமாய் அல்ல ஆரவாரத்தோடு இயேசு வருகிறார்*
by : Eddy Joel Silsbee
நியாயந்தீர்க்க மீண்டும் வருகிறவரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்து இரகசியமாக வந்து தன்னுடைய ஜனத்தை மாத்திரம் கூட்டி கொண்டு அர்மகெதோனில் போர் புரிந்து அனைத்து இராஜாங்கத்தையும் வீழ்த்தி தனக்கு கீழ் ஒரு இராஜ்ஜியத்தை ஏற்படுத்தி 1,000 வருஷம் அரசாளப்போகிறார் என்ற புரிதல் அறியாமை.
கிறிஸ்து வரும்போது
... கண்கள் யாவும் அவரைக் காணும்...
… பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்… (வெளி. 1:7) என்று வேதம் சொல்லியிருக்க இரகசியமாக அவர் வருவதில்லை !!
*யாருக்கு பயந்து அவர் இரகசியமாக வரவேண்டும்?*
அவர் நாடு கடத்தப்பட்டவரோ, வெளியேற்றப்பட்டவரோ அல்ல.
நடைமுறையில் ஆளுகை செய்துக்கொண்டிருக்கும் இராஜாதி இராஜா அவர். 1கொரி. 15:24
வழக்க மொழியில் சொல்லவேண்டுமானால் அவர் வரும்போது *தாரை தப்பட்டையோடு* உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டே ஆரவாரத்தோடும் எக்காள சத்தத்தோடும் வருகிறார்… 1தெச. 4:16
அவரின் வருகையை *அனைவரும் காண்பார்கள்*.
அனைவரும் என்றால்,
அவரை மறுதலித்தவர்களும்,
அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களும்,
அவருக்கு கீழ்படியாதவர்களும்,
அவரை எதிர்த்தவர்கள் உட்பட *அனைவரும் காண்பார்கள்*.
வெளி. 6:15-17; 18:15-19; மத். 24:30; லூக். 23:28-30
இப்பொழுது வந்தாலும் அவரை சந்திக்க தயாராயிருப்போம்..
சந்தேகம் உள்ளவர்கள் அப். 22:16ஐ வாசித்து ஒரு தீர்மானத்திற்கு வரலாம்.
தேவன் தாமே சகல நன்மையினாலும், கிருபையினாலும் நமக்கு இரங்குவாராக !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/ArkjxA2sgF4
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக