*கிறிஸ்தவர் என்னும் ஜாதி வேஷம்*
By : Eddy Joel Silsbee
இருதிறத்தாரையும் ஒன்றிணைத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிற அனைவரும் தேவனுடைய பிள்ளையாகிறார்கள். யோ. 1:12
யூதர்கள் புறஜாதியினரை கீழ் ஜாதி என்ற மமதையில் அவர்களுடன் எதற்காகவும் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுடன் திருமணம் செய்யவோ, ஒன்றாக உறவாடவோ கூடாதென்று அவர்களுக்கு பிரமாணமே கொடுக்கப்பட்டிருந்தது. உபா. 7:3, யாத். 34:15-16
இயேசு கிறிஸ்துவோ;
இஸ்ரவேலருக்கென்று பிரத்தியட்சமாய் கொடுக்கப்பட்ட 10+603=613 மொத்த நியாயப்பிரமாணத்தையும் சிலுவையில் நிறைவேற்றி நியாயபிரமாணத்தை முடித்து வைத்து புதிய ஏற்பாட்டை / புதிய கட்டளையை / புதிய உடன்படிக்கையை; இஸ்ரவேலர் உட்பட உலகமனைவருக்கும் ஏற்படுத்தினார். ரோ. 10:4, எரே. 31:31, 2கொரி. 3:6; எபி. 8:6-13, 9:15, 10:16-17, 12:24, 13:20
அப்படிபட்ட புதிய ஏற்பாட்டின் காலத்தில் புதிய கட்டளையின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கர்த்தருடைய பந்தியில் திராட்சை ரசத்தை பருகும் போதும் சதா நம்மை நினைப்பூட்டுகிறது. 1கொரி. 11:25
கிறிஸ்தவருக்குள் எவ்வித வித்தியாசமும் இல்லையென்று ஏற்படுத்தின ஆண்டவரின் சிலுவை மரணத்தையே துச்சமென்று உதாசீனப்படுத்தி;
கிறிஸ்தவ வேஷம் அணிந்து எந்த ஜாதியுடனும் தன்னை அடையாளப்படுத்துபவர் கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு செய்யும் பச்சை துரோகம்! மத். 28:19-20, எபே. 2:14-16
கிறிஸ்தவரான பின்பு எவரும் *கிறிஸ்தவர்* மாத்திரமே.
இதில்
BC கிறிஸ்தவர்,
SC/ST கிறிஸ்தவர்,
நாடார் கிறிஸ்தவர்,
முதலியார் கிறிஸ்தவர்,
பிள்ளை கிறிஸ்தவர்,
பரையர் கிறிஸ்தவர்,
வன்னியர் கிறிஸ்தவர்,
மற்றும் ஏராளமான பிரிவை தன் பெயரிலும் சமுதாயத்திலும் திருமண பந்தத்திலும் வெளிப்படுத்துவது அறிவீனம் மற்றும் முட்டாள்தனம். கலா. 3:28, ஏசா. 65:5, லூக். 7:29-30.
ஜாதி முக்கியம் என்றால்;
தனியே தங்களை BC, SC/ST, நாடார், முதலியார், பிள்ளை, பரையர், வன்னியர் அல்லது உங்களது எவ்வித பிரிவையும் கோடிட்டு அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள்.
கிறிஸ்தவத்தினுள் எந்த ஜாதியையும் அடையாளப்படுத்த முடியாது.
*ஜாதி பிரிவு இந்துக்களின் வரையறை*.
ஜாதி அவசியமென்றால் கிறிஸ்தவ வேஷம் எதற்கு?
ஞானஸ்நானம் எடுத்ததும் கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம். கலா. 3:27.
கிறிஸ்துவின் சரீரத்திலே நாம் அங்கமாகிறோம். அப். 2:47, ரோ. 12:5
கிறிஸ்துவின் சரீரத்தினுள் ஒரு பாகமாக இருந்துக்கொண்டு தன்னை வேறு ஜாதியான் என்று எப்படி அடையாளம் காண்பிக்க முடியும்?
உன்னதமான தேவனுடைய சரீரத்தையே;
சொற்ப அரசாங்க சலுகைகளுக்காக
அல்லது உலக கௌரவத்திற்காக
இரத்த வெறிக்காக
இனப் பற்றுதலுக்காக
கிறிஸ்தவர் என்ற வேஷத்தில்
தங்களை அடையாளப்படுத்தினால்;
பரலோக வாசலில் அவர்களது வேஷம் கலைந்து நித்தியத்தையே இழக்க நேரிடும் என்பதையறிந்து ஜாதி அடையாளத்தை உதறி *கிறிஸ்தவத்திற்கு* மாறவேண்டும்.
ஊழியர் போர்வையினுள் இருப்பவர்களும் முதலாவது இந்த அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கப்படவேண்டும்.
குறைகளை களைந்து உத்தமமாய் கிறிஸ்தவத்திற்கு திரும்புவது அவசியம்.
நித்திய மரியாதையும் வெற்றியும் *உங்களது ஜாதி அல்ல கிறிஸ்துவே தருகிறார்*.
நம்மைக் காணும் எவரும் கிறிஸ்துவக் காணவேண்டும். கொலோ. 3:11, கலா. 3:16, 2:20
வேஷம் களைந்தால் சத்தியம் (உண்மை) தானாக வெளிவரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/mc9gjxiWtiA
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக