செவ்வாய், 11 ஜனவரி, 2022

ஜெபத்தில் பிரசங்கம் வேண்டாம்

*ஜெபத்தில் பிரசங்கம் வேண்டாம்*

by : Eddy Joel Silsbee

 

நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்துரைக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஜெபம் என்பது, நமக்கு வேண்டியதை தேவனிடம் கேட்பது.

அதாவது மன்றாடுவது. ஆணையிடுவதோ, கட்டளையிடுவதோ அல்ல. நெகே. 1:4, 2நாளா. 6:19

 

ஜெபத்தை கூடியிருக்கும் ஜனங்களிடத்தில் அல்ல பரலோகத்தில் இருக்கும் பிதாவினிடம் கேட்கிறோம். யோ. 16:23

 

தேவனிடத்தில் தொடர்பில் இருக்கிறோம் என்பதை மறந்து,

அவரிடம் வைக்கும் விண்ணப்பத்திற்கு பதிலாக, கூடியிருப்பவர்களுக்கு ஜெபத்திலேயே ஆலோசனை வழங்கும் பழக்கம் பலரிடம் தலைதூக்கியுள்ளது.

 

ஜெபத்தில் மண்டியிட்டு தலைசாய்த்து இருப்பவரிடம்,

- நேரடியாக சொல்ல முடியாததை,

- கண்களை மூடி ஜெபத்திலிருக்கும் மனைவியினிடத்தில் நேரடியாக சொல்லமுடியாததை,

- நடந்து முடிந்த சரித்திர கதைகளை,

 

ஜெபத்தில் ஆண்டவரே, கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவரே, தேவனே என்று சொல்லி, கூடியிருக்கிறவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முயற்சிக்க கூடாது...

 

ஜெபத்தின் பெயரால் கூடியிருப்பவருக்கு தகவல் பரிமாறுவது தவறு.

 

பரம அப்பாவினிடத்தில் நம் *தேவையை கேட்பது* ஜெபம்.

 

ஜெபத்தில் கதை அடிப்பதை தவிர்த்து சரியானவற்றை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்வோம்.

 

ஆயக்காரனின் ஒரு வரி ஜெபம் பூரண பதிலை பெற்றது.

 

ஜெபம் இரத்தின சுருக்கமாய் இருக்கட்டும். (லூக் 20:47)

கதாகலாட்சேபம் அவசியமேயில்லை. மத். 6:7

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/5KEb4DflNmY

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக