திங்கள், 6 டிசம்பர், 2021

வாழ்வை முறையாய் செயல்படுத்த உதவும் கையேடு

*வாழ்வை முறையாய் செயல்படுத்த உதவும் கையேடு*

By : Eddy Joel Silsbee

 

முற்றிலும் பாதுகாக்கும் நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

விலை கொடுத்து வாங்கிய புதிய இயந்திரத்தை அல்லது கருவியை முறையாக கையாளாவிடில் நமது முறையற்ற அல்லது தவறான உபயோகமானது அக்கருவியையே வீணாக்கிவிடும்.

 

உங்களது தவறுதலால் மீண்டும் அதன் உற்பத்தியாளருக்கு அதற்குறிய தண்டம் கட்டி சரி செய்த பின்னர், மிக அதிக கவனம் செலுத்தி மீண்டும் எந்த தவறும் செய்யாமல் மிக கவனமாக பத்திரமாக உபயோகபடுத்துவோம் !!

 

இவ்வாறு தண்டம் கட்டாமல் இருக்க வேண்டுமெனில், உற்பத்தியாளர் சொன்ன செயல்முறையை உபயோகப்படுத்தும் ”முன்பதாகவே அந்த கருவியின் கற்பிப்பு கையேட்டின் (Instruction Manual) மூலம் அல்லது மற்றவரிடம் கேட்டு *முறையாக* அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

அதுபோல, நமக்கு கிருபையாக ஈவாக, கொடுக்கப்படும் ஒவ்வொரு புதிய நாளும் சரியாய் இயங்க வேண்டுமெனில் *உலகத்தை படைத்த  உற்பத்தியாளரின் கையேடாகிய பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டபடி நமது செயல் முறையை பின்பற்ற வேண்டும்*.

 

அவ்வாறு செய்தால், வாரினாலும் கடிவாளத்தினாலும் கட்டப்படாதபடிக்கு நாம் சரியான பாதையில் செல்ல அது வழி வகுக்கும் !!

 

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். சங். 32:8-9

 

வாழ்க்கைக்கான கையேடை முறையாய் படிப்போம்; பயனடைவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/5rnCCwtMnIQ

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக