by : Eddy Joel Silsbee
வார்த்தையினாலே சகலத்தையும் உருவாக்கினவராகிய நம் ஆண்டவரும், கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் எதை உச்சரிக்கிறோமோ அதையே பெற்றுக்கொள்வோம்.. (நீதி. 18:21)
ஆகவே, நம் வாயின் வார்த்தைகளை அளவாய், சரியாய், யோசித்து பேசிப்பழக வேண்டும்.
*வசனங்கள்* :
நம் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும், தேவ சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக. சங். 19:14
சகல மருந்தைக் காட்டிலும் நம் வாயின் வார்த்தைகள் ஒளஷதங்கள் (மருந்துகள்) நீதி. 12:18
கேட்பவர்களை குணமாக்கும் வல்லமை கொண்டது (நீதி. 16:24)
ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! நீதி. 15:23
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். நீதி. 12:14
கோபத்திலும், அவசரத்திலும் பேசும் எந்த வார்த்தையும் கூட நமக்கு பலனை கொண்டு வந்து சேர்த்துவிடும்.. நீதி. 6:23
ஆகவே, அது இல்லை, இப்படியில்லை என்று சதா புலம்பிக்கொண்டில்லாமல், தேவன் இன்று வரை நமக்கு கொடுத்த மற்றும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட சகல ஆசீர்வாதங்களையும் அறிந்து உணர்ந்து சந்தோஷமாய் அங்கீகரித்து சகலவற்றிற்காகவும் நன்றி சொல்லி தேவனைத் துதிப்போம்.
அவைகளினால் தேவனுக்கு சாட்சியாய் மற்றவர்களிடத்தில் பகிர்வோம். அதன் பலனை தேவன் நமக்களிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/-bv8iBKVOmo
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக