ஞாயிறு, 26 டிசம்பர், 2021

உள்ளேயும் வெளியேயும் ஒரே நிலை

*உள்ளேயும் வெளியேயும் ஒரே நிலை*

by : Eddy Joel Silsbee

 

அனுதினமும் வழிநடத்தும் பிதாவாகிய தேவன் தாமே தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

ஆலய கூடத்திற்கு வெளியேயும் கிறிஸ்தவராயிருப்பது கிறிஸ்தவத்தை பிரதிபலிப்பது ஆகும். உள்ளே மாத்திரம் பரிசுத்தவானாகவும் வெளியே ஊருக்கு உகந்தவனாய் வாழ்வதும் இரட்டை வேடம். நாமோ எங்கும் ஒரே சீரானவர்களாய் இருக்கவேண்டும்.

 

தேவனுக்கு முன்பாக மாத்திரம் அல்ல, மனுஷருக்கு முன்பாகவும் நாம் உத்தமமாய் இருப்பது அவசியமாய் இருக்கிறது. 2கொரி. 8:21

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16)

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.... மத். 5:45

 

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபே 2:10

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/bc2rR04aVkI

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக