சனி, 25 டிசம்பர், 2021

தேவனுக்கு கீழ்ப்படிவதை காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ?

*தேவனுக்கு கீழ்ப்படிவதை காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ?*

by : Eddy Joel Silsbee

 

கீழ்ப்படியும் எல்லா ஜனத்தையும் பாவத்திலிருந்து இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

உலகமே இந்த நாளை இயேசு பிறந்த தினம் என்று கொண்டாடுகிறது.

 

பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து வந்த நோக்கத்தையும்,

அவர் கொடுத்த போதனையையும் கடைபிடித்து, அவரை மாத்திரம் பற்றிக்கொள்ளும் போது நிச்சயம் பரலோகம் போக முடியும். யோ.14:6

 

*கிறிஸ்துவால் மாத்திரமே நம்மை பரலோகத்திற்கு கொண்டு போக முடியும் என்றறிருந்தும் அவரை பின்பற்றாமல் வேறொரு சாலையில் பயணித்தால் அதன் முடிவோ வேறு ஸ்தலமாகிவிடும்*. அப். 4:12

 

அவரது பெயரை உபயோகப்படுத்தினாலும்;

கிறிஸ்துவையும் அவரது போதனையையும் மறந்து சிவப்பு உடையணிந்து கும்மாளம் போட்டு சான்டாக்ளாஸையும், பரிசு பரிமாற்றங்களையும், விக்கிரக வணக்கங்களையும் அரங்கேற்றுவது வேதத்திற்கு விரோதம்.

 

கிறிஸ்துமஸ் என்ற பெயரில்;

கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் குடில் என்று அந்த அலங்காரத்தில் இடம்பெரும் “ஆடு மாடுகளுடன் மூன்று சாஸ்திரிகள்”, மேய்ப்பருடன் நட்சத்திரம் வைத்து, நாடகங்களும் கச்சேரிகளும் அரங்கேற்றி மகிழ்ச்சியாக உலகமே குதூகலித்தாலும்;

அவர்களது பாவத்தை உணர்த்தி, *வேதத்தில் சொல்லப்படாதவைகளை பின்பற்றக்கூடாதென்று* எச்சரிப்பு மணியை கட்டி அனுப்ப வேண்டிய பொறுப்பும் வைராக்கியத்தையும் உணர்ந்து வருங்கால சந்ததியையும் ஸ்திரமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஊழியர்களுக்குமுள்ளது என்பதை அறிந்து போராட வேண்டும்.

 

தேவன் தனது ஆழ்ந்த அங்கலாய்ப்பை வெளிப்படுத்தும் எசேக்கியேல் 22:23-31 வரையுள்ள இவ்வசனங்களை ஆழ்ந்து வாசித்துப் பார்க்கவும்.

 

பாவிகளை இரட்சிக்க வந்த இயேசுவின் பெயரால் *பிராந்தி கடையும், பீர் வியாபாரமும், விபசார விடுதிகளும், பொம்மைகளை வணங்கும் விக்கிரகாராதனையும் செயல்பட்டு “களை கட்டி பாவத்தை அதிகரிக்கவே செய்கிறது* !!

 

*கிறிஸ்து சொல்லாததை கிறிஸ்தவன் கடை பிடிப்பதென்பது அவனது வாழ்விற்கு ஆபத்து*.

 

சிவந்த சமுத்திரத்தை கடந்த சம்பவத்தை ஞானஸ்நானத்திற்கு  ஒப்பனையாய் சொல்லப்பட்ட சுமார் 6 லட்சம் புருஷர்கள் மோசேயின் மூலமே கொண்டிருந்தும் *தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்த 2 பேர் மாத்திரமே வாக்குத்தத்தில் பிரவேசித்தார்கள்*. 1கொரி. 10:2

 

பாவத்தை விட்டு மீட்பரை பற்றிக்கொள்ள இந்த நாள் உதவட்டும்.

 

என் தேவனே! பவுல்களாகவும் பேதுருக்களாகவும் எங்களை மாற்றும்...

 

பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பெயரால் தனது பேச்சைக் கேட்க வரும் ஜனங்களை அதிக பாவத்திற்குள்ளாக்கும் பிரசங்க மேடையாளர்களின் கண்களைத் திறந்தருளும்.

 

தேவனிடத்தில் ஆபிரகாம் கெஞ்சின 10 நீதிமான்களில் ஒருவராகவாவது, நாங்கள் இருக்க முயற்சிசெய்வோம் !! ஆதி. 18:23-32

 

சத்தியத்தை சத்தியமாய் சொல்வோம்.

பாவத்திலிருப்பவர்களின் வாழ்வில் இரட்சிப்பு மலரட்டும்.

 

தேவனுக்கு கீழ்ப்படிவதை காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ? அப். 5:29

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/Iu2RvgMxd38

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக