#297 - *ஸ்வாமி என்றால்
என்ன? நாம் அந்த
வார்த்தையை உபயோகபடுத்தலாமா?*
*பதில்* :
ஸ்வாமி என்பது
சமஸ்கிருத சொல்.
இந்துக்கள் தங்கள்
தெய்வங்களை குறிக்கும் வண்ணமாக இந்த சொல்லை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
ஸ்வா என்ற சமஸ்கிருத
வார்த்தைக்கு *தான்* என்று பொருள்.
ஸ்வாமி என்ற
வார்த்தை கணவன், ஆன்மீக குரு, எஜமான், கற்சிலை, இந்துக்களின் தெய்வங்களையும் குறிக்கிறது.
வங்காள மொழியில்
ஜாமி என்றும், மலாய் மொழியில் சுவாமி என்றும் தங்கள் கணவரை இன்றும் அழைக்கிறார்கள்.
வழக்கமாக
கிறிஸ்தவர்கள் வேத மொழிபெயர்ப்பின் படி தேவன்(வடச்சொல்) என்றே பயன்படுத்துவதால் –
தேவன் என்று உச்சரிக்கும் போது – மற்றவர்களுக்கு உடனே கிறிஸ்தவத்தை பிரதிபலிக்கிறது.
(தீத்து 3:8)
விக்கிரகத்தை
குறிக்கும் வண்ணம் நம் தமிழ் வேதாகமத்தில் *சுவாமி* என்று நியாயாதிபதிகள் 17:5ல் ஒரு
முறையும்
விக்கிரக ஆராதனைகாரர்கள்
தங்கள் தெய்வத்தை கூப்பிடும் பழக்கத்தில் *சுவாமி* என்று இரண்டாவது முறையும் தமிழ்
வேதத்தில் மொழிபெயர்க்கப்பட்டதை யோனா 1:6ல் காணலாம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக