வியாழன், 23 டிசம்பர், 2021

ஏன் சமாதான குறைச்சல்?

*ஏன் சமாதான குறைச்சல்?*

by : Eddy Joel Silsbee

 

நாம் எப்போதும் ஆனந்தமாய் இருக்கத்தக்கதாக தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

சமாதானத்தின் தேவனை நாம் தொழுது கொள்ளும் போது சமாதான குறைச்சல் ஏன் வருகிறது?

 

யாக்கோபு 1:14ன்படி, வாழ்க்கையில் சமாதானமின்றி இருப்பது அவரவர் செயல்களே.

 

அதீத ஆசை,

அதீத எதிர்பார்ப்பு,

தேவ பயமின்மை,

நம்பிக்கையற்ற ஜெபங்கள் போன்ற பல காரணிகளால் நிகழ்கிறது.

 

உட்கார்ந்த இடத்திலேயே சுகமாய் சாப்பிட்டு வாழ்ந்த வாழ்கையை *கோபத்தினால்* இழந்தார் காயீன். ஆதி. 4:5-8

 

*வைராக்கியதினாலும், வறட்டு கோபத்தினாலும்*, ராஜாங்கத்தையே இழந்தான் பார்வோன். யாத். 10:11; 10:28

 

மொர்தெகாய் தன்னை மதிக்கவேண்டும் என்ற வறட்டு கௌவுரவத்தினால் அல்லது வறட்டு எதிர்பார்ப்பினால் *ஆமான் மரித்தே போனான்*. எஸ்தர்  3:5

 

பல நேரங்களில்,

நமக்கு ஏற்படும் இடற்பாடுகளை பொறுக்க மனமில்லாமல் வெகுண்டு எழுந்து விடுவதால் தற்போது இருக்கும் ஆசீர்வத்தையும் இழக்க நேரிடுகிறது.

 

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் *பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது*. எபி. 10:36

 

ஒழுங்காக இருப்பதை மேன்மையாக தக்கவைத்துக்கொள்ளும்போது, இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தை பெறுவது நிச்சயம். லூக்கா 19:17

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/kUAKXeZ6WPA

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக