புதன், 22 டிசம்பர், 2021

இல்லாததை தேடி உள்ளதை தொலைக்கவேண்டாம்

*இல்லாததை தேடி உள்ளதை தொலைக்கவேண்டாம்*

by : Eddy Joel Silsbee

 

சமாதானமாய் வழிநடத்தும் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சுகமாய் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் எகிப்திலிருந்து வெளியே வந்த ஜனம்;

இல்லாததை நினைத்து “இந்த வனாந்திரத்தில் சாகவா எங்களைக் கூட்டி வந்தீர்என்று அவர்கள் புலம்பின பிரகாரமே அவர்கள் தங்கள் வாயின் வார்த்தையை அந்த வனாந்திரத்திலேயே கண்டார்கள் !!

 

அவ்வாறு புலம்பாத 2 பேர் மாத்திரம் கடைசியில் தங்கள் எல்லையை அடைந்தார்கள்.

 

முறுமுறுக்கும் போது தேவன் வன்மையாக *நம் மீது கோபப்படுகிறார்*. எண். 11:1

 

ஜுரம் உள்ளவர்கள் -> அரிபிளவினால் (கேன்சர்) போராடுபவர்களை கவனிக்க வேண்டும்.

 

தம்பதியர் -> விதவைகள் வேதனையைப் பார்க்க வேண்டும்.

 

பெற்றோர் -> பிள்ளைக்காக ஏங்கும் தம்பதியினரை பார்க்க வேண்டும்.

 

பணிபுரிவோர் -> வேலை தேடுபவர்களை கவனிக்க வேண்டும்.

 

ஏழைகள் -> கடன் பாரத்தோடும், வியாதியோடும், தூக்கமின்றியும் அங்கலாய்ப்பில் புலம்பும் பணக்காரைப் பார்க்க வேண்டும்.

 

யார் யாருக்கு, தேவன் எதை கொடுத்திருக்கிறாரோ, *அதில் சந்தோஷப்பட்டு தேவனுக்கு நன்றி சொல்லி வாழ கற்றுக்கொள்வோம்*.

 

கணவனும், மனைவியும், பிள்ளையும், தொழிலாளியும், முதலாளியும், ஊழியனும், பெற்றோரும் நாம் சுவாசத்தோடு  இருப்பதே பெரிய பாக்கியம் என்பதை மறவாதிருங்கள்.

 

நஷ்டமோ, கஷ்டமோ, வேதனையோ, துன்பமோ, பிடித்திருக்கிறதோ, பிடிக்கவில்லையோ எதுவாயினும் ஆண்டவர் கொடுத்தது *நன்மைக்கே* என்றுணர்ந்து ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லி தற்கால இக்கட்டுகளிலிருந்து கடந்து செல்லும் பெலனை தரும்படி ஜெபித்து அதன் பலனைக் காண்போம். சங். 57:1

 

இல்லையெனில், இல்லாததை தேடி உள்ளதையும் தொலைக்க நேரிடலாம். மத். 13:12

 

ஜெயத்தை சுவிகரித்துக்கொள்ளும் போது இந்த இக்கட்டுகளினாலேயே அந்த ஆசீர்வாதம் கிடைத்தது என்றுணர்வோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/ivizsZQS9hU

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக