*எச்சூழ்நிலையிலும் வைராக்கியமாய் வாழ்வோம்*
by : Eddy Joel Silsbee
அதினதின் காலத்தில் சகலத்தையும் நேர்த்தியாய் செய்யும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். பிர. 3:11
உலக வாழ்க்கையை துச்சமென நினைத்து, பரலோகத்தின் வாசலை நாடி, சகலத்தையும் கர்த்தருக்கென்று நஷ்டமாய் விட்டார் அப். பவுல். பிலி. 3:7
உலக அறிவை எவ்வளவும் வளர்த்திக்கொண்டாலும், கர்த்தரை *சரியாக அறிகிற அறிவே முக்கியம்* என்பதை உணர்ந்துக்கொண்டார் அப். பவுல். பிலி. 3:8
இயேசு அப்பா அல்ல,
அவரை கர்த்தரும், ஆண்டவரும், இரட்சகரும், கிறிஸ்துவுமாக்கினார் பிதாவாகிய தேவன். அப். 2:36, பிலி.2:11, சங். 110:1, லூக். 2:11, யோ. 13:13, அப்.10:36, ரோ. 14:11, 1கொரி. 8:6
அவர் *கர்த்தராயிருப்பார்* என்று எரேமியா காலத்திலேயே முன்னறிவிக்கப்பட்டது. எரே. 23:6
*கர்த்தராகிய இயேசு* என்று அறிக்கையிடவேண்டியது, இரட்சிப்பிற்கு அவசியம் !! ரோ. 10:9-12
அனைவருக்கும் *ஆண்டவராயிருக்கும்பொருட்டு*, கிறிஸ்து மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடெழுந்தார். ரோ. 14:9
பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டவர்;
இயேசுப்பா என்ற உறவில் அல்ல, *கர்த்தர் என்பதை அறிந்துக்கொள்வார்கள்* !! 1கொரி. 12:3, மத். 16:16-17
இப்படியாக, சத்தியத்தில் வளர்ந்து,
பலஆயிரங்களுக்கு தீர்க்கமாய் போதித்து,
தன் மருத்துவ தொழிலையும் 1983-களிலேயே தினமும் சுமார் 500-800 ரூபாய் வருமானம் பார்த்துக்கொண்டிருந்த போது, மருத்துவத் தொழில் வியாபாரமாக மாறவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதை உணர்ந்த தன்னுடைய மருத்துவமனையை மூடிவிட்டு,
பூரணமான நேரத்தை சிலவிடும் பொருட்டு முழுநேர ஊழியத்தில் கடந்து வந்து தன் வாழ்நாள் முழுவதும் சத்தியத்தில் நிலைநிற்பதில் எந்த சமரசமும் யாரிடமும் செய்யாமல்,
அடுத்த வேளை போஜனத்திற்கு என்ன செய்வதென்று திண்டாடினபோது கூட எவருக்கும் தலை வணங்காமல்,
பலர் பண உதவி செய்ய முன்வந்தபோதும் சத்தியத்தில் அவர்கள் இல்லை என்பதால் அவர்களின் பணத்தில் கூட வளரக்கூடாதென்று அதை மறுத்து, (ஆதி.14:22)
எங்களையும் சத்தியத்தில் நிலைநிற்கும்படி உற்சாகப்படுத்தினவரும்,
தேவசேனை என்ற மாத இதழின் மூலம் தமிழ் மக்களுக்கு அதிதீவிரமாக சத்தியத்தை ஆணித்தரமாக போதித்து பலருக்கு சவாலாக வாழ்ந்தவரும்,
பல நூறு வேதாகம வகுப்புகளை நடத்தினவரும்,
சத்தியத்தை துல்லியமாய் வெளிப்படுத்தும் அநேகமாயிரம் கட்டுரைகளை எழுதினவரும்,
தாமாக முன்வந்து மாவட்ட நீதிபதிக்கான அந்தஸ்தில் புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்தவ திருமண பதிவாளராக (Sec.7 of ICM 1872) இருக்கவேண்டும் என்று தமிழக கவர்னரால் நேரடியாக நியமிக்கப்பட்டவரும் (இத்தகைய பதவியில் தமிழகத்தில் வாழ்ந்த கடைசி நபரும் இவரே),
அநேக வேதாகம பாடங்களை எழுதி பலரை ஊழியராக்கி பயிற்றுவித்தவருமானவரும்,
புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவின் சபை ஊழியரும்,
கடைசியாக மூன்று பேருக்கு கணியாகுளத்தில் ஞானஸ்நானத்தை கொடுத்து,
தன் கடைசி பிரசங்கத்தை கணியாகுளம் கிறிஸ்துவின் சபையில் செய்தவரும்,
சரீரபிரகாரமான என் தகப்பனாருமான *திரு. டாக்டர். எம். சில்ஸ்பி* அவர்கள் ஆபிரகாமின்மடிக்கு கடந்து சென்ற நாள் இன்று.
சரீரபிரகாரமாக எங்களை பிரிந்து இன்றோடு இரண்டு வருடம் பூர்த்தியானாலும், கடந்த ஒவ்வொரு 365 நாளும் ஏதாவதொரு வகையில் அவரை நினைக்கும்படி அநேக வழிகாட்டுதலை விட்டுச்செல்ல என் அப்பாவிற்கு உதவின நம் பரம தகப்பனுக்கும்
கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் தன்னுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றும்படி பாதைகளை விட்டுச்சென்ற நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கும் கோடானுகோடி நன்றிகள். 1பேதுரு 2:21
நானும் என் சந்ததிக்கு நல்லதொரு அடிச்சுவடுகளை விட்டுச்செல்ல என் தேவன் எனக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்டதான ஜெயமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ கிருபை பாராட்டுவாராக.
நம் வாழ்வில் எத்தனை சோதனை வந்தாலும்,
நம்மை அநுதினமும் சத்தியத்தில் நிலைநிற்கும்படியும்,
நம் சந்ததிக்கு நாம் சாட்சியுள்ள நேர்த்தியான கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை ஆணித்தரமாக திருஷ்டாந்தப்படுத்தி வாழும்படி தேவன் தாமே இன்னும் நமக்கு கிருபை பாராட்டுவாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/fKZmdJ7TBGc
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக