சனி, 18 டிசம்பர், 2021

பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்

*பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்*

by : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

ஆவியில் நிறைந்து அப்போஸ்தலனாகிய பேதுரு பிரசங்கம் செய்தது போல நம் அனைவருக்கும் ஆவியில் நிறைந்து இருக்க பிரியம். (அப். 4:8)

 

*ஆவியில் நிரம்பி* ஜெபிக்கணும்

*ஆவியில் நிரம்பி* ஊழியம் செய்யணும்

*ஆவியில் நிரம்பி* செய்தி கொடுக்கணும்

*ஆவியில் நிரம்பி* ஆராதனை நடத்தனும் என்று விருப்பம் கொள்வது ... நல்லது தான்..

 

வேதமோ,

ஆவியில் குறைவுபட்டவர்கள் (ஆங்கிலத்தில் Poor in Spirit) அல்லது ஏழ்மையானவர்கள் பாக்கியவான்கள்; *பரலோகராஜ்யம் அவர்களுடையது* என்று வேதம் சொல்கிறது. மத். 5:3

 

*ப்தோகொஸ் என்கிற கிரேக்க வார்த்தைக்கு எளிமை என்று தமிழாக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது குறைவு அல்லது பிச்சை எடுக்கும் அளவிற்கு இல்லாத நிலை என்று பொருள்*.

 

ஆவியில் எளிமை என்றதும்;

ஜோல்னா பையை மாட்டிகொண்டு,

கதர் வெள்ளையில் பைஜாமா உடை அணிந்து,

ஆன்மைக்கான அடையளத்தின் மீசையைக் கூட மளித்துக் கொண்டு,

செருப்பும் அணியாமல் இருப்பது பரிசுத்தம் என்று வேதம் சொல்லவில்லை.

 

பரிசுத்த ஆவி எனக்கு இன்னமும் தேவை,

பெற்ற பரிசுத்தம் போதாது,

இன்னும் பரிசுத்தம் அடையவேண்டும்,

இன்னும் தேவை,

இன்னும் தேவை என்று பெற்றிருக்கும் ஆவியில் தனது குறைவை / ஏழ்மையை / நிறைவின்மையை / எளிமையை உணரும்போது அதை இன்னும் அடையும்படி நம்மை நாமே ஆராய்ந்து, சரிபார்த்து, தேவனுக்கேற்றவைகளை சிந்தித்து வேதத்தின்படி நம்மை அநுதினமும் மாற்றியமைத்துக்கொள்ள முற்படும் போது *பரலோக இராஜ்யம்* நம்முடையதாகிறது !!

 

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத். 5:6

 

..நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளி. 22:11

 

அல்லேலுயா !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/xDeLSR-8yC4

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக