வெள்ளி, 17 டிசம்பர், 2021

நாம் பரம இராஜாவின் பிள்ளைகள்

*நாம் பரம இராஜாவின் பிள்ளைகள்*

by : Eddy Joel Silsbee

 

சகலத்திலும் மேலான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

பரலோகத்திற்கென்று நாம் அழைக்கப்பட்டவர்கள்.

 

இராஜாதி இராஜனின் இராஜ்ஜியத்திற்காக நாம் அழைக்கப்பட்டவர்கள்.

 

அவரின் உன்னதமான வேலையை செய்ய நாம் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.

 

அனுதினமும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடைய நாம் போதிக்கப்பட்டவர்கள்.

 

இவ்வளவு மேன்மையும் உள்ளது என்று நமது அனுதின வாழ்வில் உணர்ந்தோமானால் ஒருபோதும்;

தாழ்வான எண்ணங்கள்,

கோள் மூட்டும் பழக்கம்,

மற்றவர்களை தாழ்த்தி தான் உயர வேண்டும் என்ற கோட்பாடு,

கோபம், பொய், வீண் கற்பனைகள்,

இல்லாததை பிணைக்கும் தந்திரங்கள்,

எப்போதும் குறை சொல்லுதல்,

நன்மையை பாராட்டாமல் தவிர்ப்பது போன்ற இப்படிப்பட்ட பல தீய காரியங்களை அநுமதிக்கமாட்டோம்.  

 

இவைகள் நம்முடைய தன்மையையும் பெற்றிருக்கும் மேன்மையையும் அழைக்கப்பட்ட அழைப்பின் பாத்திரத்தையும் குறைத்து விடும்.

 

ப்படிப்பட்ட எண்ணங்கள் தலை தூக்கும் போது, எந்த நிலையில் நாம் உயர்த்தப்பட்டிருக்கிறோம் என்று நம்முடைய அழைப்பை ஞாபகம் வைத்து, சுபாவ எண்ணங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

தேவன் தாமே அதற்கான பெலன் தருவாராக. கொலோ 3:2, 5, சங். 62:10, நீதி. 23:5

 

இராஜாவின் பிள்ளைகள் என்பதை நாம் நினைவில் கொள்க !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/JIu3tERN1UQ

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக