புதன், 24 நவம்பர், 2021

#1116 - ஆண்டவர் பிடிப்படுவதற்கு முன்பாக சீஷர்களுடனே பஸ்காவை புசிக்கிறார் (லூக்கா: 22:15)ல். ஆனால், யோவான்:18:28ல் பஸ்காவின் புசிக்கவேண்டுமென்று தேசாதிபதியின் அரண்மனைக்குள் பிரவேசியாமல்  இருந்தார்கள்....என்று வசனம் சொல்லுகிறது... பஸ்கா பண்டிகை எந்த நாளில் நடந்தது?

#1116 - *ஆண்டவர் பிடிப்படுவதற்கு முன்பாக சீஷர்களுடனே பஸ்காவை புசிக்கிறார் (லூக்கா: 22:15)ல். ஆனால், யோவான்:18:28ல் பஸ்காவின் புசிக்கவேண்டுமென்று  தேசாதிபதியின் அரண்மனைக்குள் பிரவேசியாமல் இருந்தார்களே? பஸ்கா பண்டிகை எந்த நாளில் நடந்தது?*

*பதில்* : மிக அருமையான ஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள்.

சட்டத்தின் சடங்குகளை மேன்யாய் கருதி, தீட்டுப்படாமலிருக்க முயற்சிக்கும் இந்த பரிசேயர்கள் எவ்வாறு கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்தார்களோ அவ்வாறே இன்றளவும் தன்னைக் கிறிஸ்தவர் என்று மார்தட்டிக்கொண்டு வேதத்திற்கு முரணான சகல அசுத்தங்களையும் ஆராதனை என்ற பெயரில் கச்சேரியாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இக்கால கிறிஸ்தவ மத பரிசேயர்கள் !!

பிரபலமானதாக அல்ல, தடவியாகிலும் கண்டுபிடிக்கப்படும் இடத்தில் தான் கிறிஸ்தவம் இன்றும் உள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. அப். 17:27, மத். 7:14

வாரந்தோரும் தங்களது நிறுவனங்களில் அரங்கேற்றுவதையும் கடந்து வருடத்தில் டிசம்பர் மாதமும் ஏப்ரல் மாதமும் வந்துவிட்டால் அதுவரை சத்தியத்தை தேடிக்கொண்டிருப்பவரைக் கூட கவிழ்த்துப்போடும் அளவிற்கு பண்டிகைகளின் ஆதிக்கத்தில் தங்களது சபையாரை கிறிஸ்துவின் இராஜ்யத்தினின்று விலக்கி வைப்பதில் இன்றைய கிறிஸ்தவ மத பரிசேயர்கள் இருக்கிறார்கள்.

வெளித்தோற்றத்தில் சிலவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் துன்மார்க்கச் செயல்களுக்கு மத்தியில் தங்கள் மனசாட்சியை எவ்வாறு நிம்மதியாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள் என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது.

"பஸ்கா" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையின் அர்த்தம், இந்த பண்டிகையை அனுசரிக்கும்போது கொல்லப்பட்டு உண்ணப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி.

இதற்கு முந்தைய நாள் இயேசு தம் சீடர்களுடன் இதைக் கடைப்பிடித்தார்.

இயேசு பஸ்கா என்ற நாளை கடைப்பிடிக்கும் வழக்கமான நேரத்தை அவர் எதிர்பார்த்தார் என்றும், ஆனால் யூதர்கள் தாங்கள் கடைப்பிடித்த நாளில் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் பலரால் கருதப்படுகிறது. ஆனால் இந்த கருத்து தவறானது. எப்போது இந்நியமத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பது மோசேயின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நியாயபிரமாணத்தை துளியளவும் மீறாதவர் நம் இரட்சகர் என்பதை நாம் அறியவேண்டும்.

இயேசு கிறிஸ்து எந்த சூழ்நிலையிலும் பாவஞ்செய்யவில்லை.  அவர் வாயிலே வஞ்சனை கூட காணப்படவுமில்லை (1பேதுரு 2:22)

அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ் கூட “அவர் குற்றமில்லாதவர்” என்று கூறினான் (மத். 27:4)

இயேசுவை விசாரித்து கொண்டிருந்த அதிகாரியான பிலாத்துவின் மனைவி “இயேசுவானவர் நீதிமான் என்றாள்” (மத். 27:19)

தீர விசாரித்த அதிகாரியான பிலாத்துவும் “இவர் குற்றமற்றவர்” என்று தீர்ப்பு கொடுத்தார் (மத். 27:23-24)

சிலுவையில் தொங்கிகொண்டிருந்த கள்ளன் “இயேசு தகாததொன்றையும் செய்யவில்லை” என்றான் (லூக்கா 23:41)

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த படைதலைவன் “இயேசு உண்மையான நீதிபரர்” என்றான் (லூக்கா 23:47)

இயேசுவும் தன்னிடத்தில் “எந்த குற்றம் இருந்தால் கண்டு பிடியுங்கள் என்று ஜனங்களிடத்தில் சவால் விட்டார்” யோ. 8:46

ஆகவே, இயேசு கடைபிடித்த நாள் பஸ்கா தான் என்பதில் எந்த ஐயப்பாடும் சந்தேகமும் இல்லை. எல்லா சூழ்நிலைகளும், அவர் வழக்கமான நேரத்திலும், முறையிலும், மத். 26:17; 26:19 அதைக் கடைப்பிடித்தார்.

யோவானிலுள்ள ஒரே ஒரு வசனம் இதற்கு முரணான கருத்துக்கு வழிவகுத்தது; ஆனால் இங்கே பஸ்கா என்ற வார்த்தைக்கு பஸ்கா ஆட்டுக்குட்டி என்று அர்த்தம் இல்லை. இது அநேகமாக ஆட்டுக்குட்டியின் பலியைத் தொடர்ந்து, ஏழு நாட்கள் தொடர்ந்த பண்டிகையைக் குறிக்கிறது. எண்_28:16-17 ஒப்பிடவும். முழு விருந்தும் பஸ்கா என்று அழைக்கப்பட்டது.

எண். 28:16-17ன் படி இஸ்ரவேலருக்கு முதல் நாள் துவங்கி ஏழு நாட்களும் அவர்கள் பஸ்காவை ஆசரிக்கிறார்கள்.

இவ்வசனங்களையும் வேதத்திலிருந்து படிக்கவும். 2நாளா. 30:21-24; 35:8-14; 35:17-18; எசே. 45:21

இதனடிப்படையில் மறுநாள் காலையில் தேசாதிபதி பிலாத்துவின் அரண்மனை வாயிலில் நின்ற இந்த பரிசேயர்கள் சொல்லியிருக்கலாம். (யோ. 18:28)

மேலும் பஸ்கா ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள் தங்களைத் தீட்டுப்படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் மீதமுள்ள விழாக்களில் பங்கேற்க அது அவர்களைத் தகுதியற்றதாக்கும்.

இந்தக் காலங்களில், ஒரு புறஜாதியினரின் வீட்டிற்குள் நுழைவதை தீட்டாக கருதினர். ஆனால் எந்த பாவமும் செய்யாத இரட்சகரைக் கொன்று, தங்கள் கைகளை மேசியாவின் இரத்தத்தில் புகுத்திய ஆழமான குற்றத்தைப் பற்றி அவர்கள் முற்றிலும் கவலைப்படவில்லை.

*கேள்விக்கு சம்பந்தப்படாத கூடுதல் தகவல்*: கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது வியாழன் என்பதற்கான விரிவான விளக்கத்தை நமது கேள்வி பதில் எண் #270ஐ படிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக