*உலக காரியத்தில் அவசரம் வேண்டாம்*
By : Eddy Joel Silsbee
பொறுமையின் சிகரமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அவசர உலகம்..
வேலையே இல்லையென்றாலும் விண்ணப்பித்த 7 நாளைக்குள் வரவேண்டிய பாஸ்போர்ட்டை தட்கள் முறையில் 3 நாளைக்குள் பெற்றுவிடவேண்டும் என்ற துடிப்பு இக்காலங்களில் உள்ளது.
வங்கிக்கு போனால் பின்னதாக நிற்க பொறுமையில்லாமல் ஏற்கனவே வரிசையில் நிற்பவர்களை ஏமாற்றி, தன் காரியம் நிறைவேற சகல யுக்திகளையும் கையாண்டு Counterக்கு செல்வது…
அரசாங்க அலுவலகத்தில், மற்றவர்களது ஆவணங்களை விட தனது ஆவணம் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்ற அவசர கதி !!
கூட கொஞ்சம் பணம் கொடுத்தாவது நம்முடைய காரியம் மாத்திரம் முதலில் நடக்க வேண்டும் …
இந்த ஒழுங்கீனம் கிறிஸ்தவனுக்கு எப்படி வருகிறது?
கிறிஸ்தவனுக்கு ஒழுக்கமும் பொறுமையும் அவசியமாயிற்றே !!
1-வசனத்தை தன்னில் காத்து பலன் கொடுக்க – பொறுமை அவசியம் (லூக்கா 8:15)
2-பொறுமையினால் ஆத்துமாவை காத்துக்கொள்கிறோம். லூக்கா 21:19
3- பலன் கிடைக்காமல் போனாலும் நீடிய பொறுமையோடு நன்மை செய்கிறவன் மகிமையும், கணமும், நித்திய ஜீவனும் பெற்றுக்கொள்கிறான் – ரோமர் 2:7
4- அன்பு செய்கிறவர்களுக்கு வரும் முதல் குணம், ”பொறுமை” – 1கொரிந்தியர் 13:4
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
ஆகவே, அவசரம் வேண்டாம்.. கர்த்தருடைய நேரத்திற்கு நாம் காத்து இருப்போம்.
அவரே அதை வாய்க்க செய்வார்.
கிறிஸ்துவை கண்டு அடையவே நம் துரிதத்தைக் காண்பிப்போம். (யோவான் 20:4)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/C_fik1OGIbo
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக