*கண் ஜாடை - ஆபத்து*
By : Eddy Joel Silsbee
நேர்த்தியாய் நடப்பவர்களை ஆசீர்வதிக்கும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மனுஷனுடைய பார்வையே அவன் சரீரத்தை (குணத்தை) நிதானிக்கிறது. லூக்கா 11:34
நேருக்கு நேராக பாராமல்;
சரீரத்தை மறைத்துக்குகொண்டு ஓரமாக ஒளிந்துக்கொண்டு பார்ப்பது,
முகத்தை ஒருபக்கம் திருப்பி கண்ணை மாத்திரம் இன்னொரு திசையில் பார்ப்பது,
கண்களை மூடிக்கொண்டது போல பாவித்து இடைவெளியில் கவனிப்பது,
கண்களை மூடிக்கொண்டு பேசுவது,
ஒருவரிடம் பேசுகையில் மற்றவரிடம் கண் அடிப்பது,
கண்கள் மூடியிருப்பது போல் பாவித்து சிறிதான இடைவெளியில் பார்ப்பது போன்ற வித்தைகள் அனைத்தும் தவறான நோக்கம் கொண்டவை. மத். 6:23
கண் ஜாடை காட்டுகிறவர்களின் இருதயம் சரியானதல்ல என்று வேதம் எச்சரிக்கிறது !!
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான். நீதி. 10:10
அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான்.. நீதி. 6:13
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன? யோபு 15:12;
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. சங். 35:19
கண் பார்வை இருதயத்தை வெளிப்படுத்துகிறது. மத். 5:29
எண்ணங்கள் சீர்படும்போது தேவனுடைய பார்வை நம் மீது படுகிறது. 1பேதுரு 3:4
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்: https://youtu.be/gfzHOLWhjOM
*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக