செவ்வாய், 5 அக்டோபர், 2021

பயபக்தியுடன் இருப்போம்

*பயபக்தியுடன் இருப்போம்*

By : Eddy Joel Silsbee

 

சகல ஆளுமையையும் உண்டாக்குகிற பிதாவானவர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

அதிகமோ, குறைவோ, சந்தோஷமோ, துக்கமோ எந்த வருமானத்தையும் தேவனே நிர்ணயித்து நமக்கு வருகிறது என்பதை நாம் மறக்க கூடாது. சங். 37:5

 

எந்த வேலையாக இருந்தாலும்,

அதை நேர்த்தியாய் கிரமமாய் செய்ய வேண்டும் என்று வேதம் நமக்கு கட்டளை இடுகிறது. 1கொரி. 14:40

 

நாம் செய்யும் எந்த காரியமும் நன்மையாய் வாய்க்கவும், நம் மந்தையை தக்கவைக்கவும் வேண்டுமானால் முதலாவது கர்த்தரை *நாம் தேடவேண்டும்*. எரே. 10:21, ஏசா. 48:15

 

சுய புத்தியை சார்ந்து சுய நம்பிக்கையில் செய்யப்படும் கிரியை  நிலைநிற்காது. எரே. 2:37

 

எஜமானன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்... மோசமானவனோ அயோக்கியனோ, ஊதாரியோ என்று எண்ணாமல் அவர் நமக்கு எஜமானன் என்கிற அதிகாரத்தை கொடுத்தது நம் தேவனே என்பதால் எப்படிப்பட்டவராயிருந்தாலும் அவருக்கும் நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும். கொலோ. 3:24, 1பேதுரு 2:18, ரோ. 13:2

 

ஒவ்வொரு எஜமானும்;

தன்னுடைய அதிகாரம், மேன்மை, வளர்ச்சி, செல்வாக்கு, சம்பந்து அனைத்தும் தனது சுய உழைப்பினாலே பெற்றது என்று நினைத்துவிடாமல் தேவனுக்கு பயந்திருக்கவேண்டும். ரோ. 13:1, எரே. 27:5-6, தானி. 2:21

 

சகலத்தையும் தேவனே நமக்கு ஆசீர்வதித்து அளந்து தருகிறவர். யாக். 1:17

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்: https://youtu.be/B5Q3shFgHhk (Watch & Subscribe)

 

*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக