வியாழன், 28 அக்டோபர், 2021

சொந்த புத்தியால் நிர்வாணமே மிஞ்சும்

*சொந்த புத்தியால் நிர்வாணமே மிஞ்சும்*

By : Eddy Joel Silsbee

 

உன்னதங்களில் வாசம் செய்யும் நித்திய பிதாவின் கிருபை நம்மை ஆண்டுக்கொள்வதாக.

 

*பாவம் செய்த போது*, தான் நிர்வாணியாய் இருப்பதை ஆதாமும் ஏவாளும் உணர்ந்தர். ஆதி. 3:7-10

 

*பாவம் செய்த இஸ்ரவேலர்கள்* அவமானப்படும்படியாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கினார். (யாத். 32:25)

 

*பாவமில்லாதபோது*” நிர்வாணம் தவறாகத் தெரியவில்லை. ஆதி. 2:25; யோபு 1:21; பிர. 5:15; மீகா 1:8; ஆமோஸ் 2:16

 

பிசாசு பிடித்தவர்களும், பாவத்தால் மேற்கொள்ளப்பட்டவர்களும் பொது இடங்களில் நிர்வாணமாக நின்றதை வேதாகமத்தில் பார்க்கிறோம். மாற்கு 5:15

 

பாவஞ்செய்து, சரீரம் மண்ணுக்கு திரும்பவேண்டும் என்ற கட்டளையைப்பெற்ற பின்னர் பிறந்த நாமனைவரும் சரீரத்தை மூடியிருக்க வேண்டும் என்று ஆண்டவர் தாமே தோல் ஆடைகளை ஆதி தம்பதியருக்கு உடுத்துவித்தார். ஆதி. 3:21

 

மரிக்கும் வரை உணர்வுகளும் உறவுகளும் அனைவருக்கும் உண்டு. மிருகங்களுக்கு அந்த அறிவு கொடுக்கப்படவில்லை.

 

தவறான போதனைக்கும், புரிதலுக்கும், கலாச்சார சீரழிவிற்கும் தப்பி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடப்போம்.  எசே. 23:29

 

நித்திய கட்டளைக்கு உட்படாமல்;

பணம், செழிப்பு, அதிகாரம், பதவி, சம்பாத்தியம், உறவுகள், சொத்துக்கள், குடும்பம் போன்ற அனைத்தை உதறிவிட்டு சுயம் வெறுத்தவன் என்று துறந்து அலைவதால் மோட்சத்தை சம்பாதித்து விடலாம் என்று நினைத்தால்; வேதமோ வேறு மாதிரி சொல்கிறது !! அப்படிப்பட்டவர்கள் உன்னதத்தின் மகிமையான *வாசலண்டை கூட போகமுடியாதாம்*. ரோ. 11:6, தீத்து 3:5, யோ. 3:3

 

வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் கொடுத்தாலும், ஒரே ஒரு சதுரடி நிலத்தைக்கூட பரலோகத்தில் நமக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கீடோ முன்பதிவோ செய்துக் கொள்ள முடியாது !!

 

அந்த பாக்கியத்தை நாம் கிருபையால் மாத்திரமே பெற்றுக்கொள்கிறோம். கிரியையினால் அல்ல. யோ. 14:3, 1பேதுரு 1:13-16, தீத்து 3:5-6, எபே. 2:5

 

ஆகவே, பரிசுத்தம் என்று நினைத்துக்கொண்டு சொந்தக் கிரியையை செயல்படுத்தாமல், சுயச்சிந்தனையிலிருந்து வெளியேறி கர்த்தருக்கு கீழ்படிந்து, பயந்து, சத்தியத்தின்படி நடந்தால் மாத்திரமே சொர்க்கம் கிட்டவாய்ப்புள்ளது. சொந்த புத்தியால் நிர்வாணமே மிஞ்சும் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/8rK9P9zN2L4

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக