*ஜீவனுள்ளோர் பரிசோதித்துக்கொள்ளும் மரணவீடு*
By : Eddy Joel Silsbee
ஜீவனையும் சுவாசத்தையும் கொடுக்கும் தேவனுக்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
பிறந்த வீட்டில் சந்தோஷம் சூழ்ந்து இருக்கும்.
களிப்பு மிகுதியாய் இருக்கும்.
மனம் நிறைவாக இருக்கும்.
எல்லோரும் நிறை குறைகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள்.
அவரவர் அனுபவத்தை சொல்லி மெச்சிக் கொள்வார்கள்.
ஆனால்,
மரண வீட்டிலோ, எல்லோரும் அமைதி காப்பார்கள்.
அழுது புலம்புவார்கள்.
மரித்தவரை குறித்து மாத்திரமே பேசுவார்கள்.
மரித்தவரின் தவறுகளை சுட்டிக்காட்ட முயலாமல் அவர் செய்த நன்மைகளும், உதவிகளும், உபகாரங்களும் பேசப்படும். யோபு 3:17
அநேகருக்கு அன்று தங்கள் சொந்த நடக்கையை சோதித்துப் பார்க்க ஏதுவாகிறது. பிர. 7:1
ஆம், இன்றும் நமக்கு ஜீவனைத் தந்த தேவனுக்கு பிரயோஜனப்படும்படி;
மரணக்கண்ணிகளுக்கு தப்பி நம்மை மீந்திருக்க செய்து, கண்களைப் பிரகாசிப்பித்து, வாழ்வின் இக்கட்டுகளிலிருந்து இன்றும் கொஞ்சம் உயிர் கிடைக்க அவராலே கிருபை கிடைத்தது. எஸ்றா 9:8
நம் பிரயாசமும் முயற்சியும் சமாதானமுள்ளதாயிருக்கவும்; அதின் பலனை அடையவும்; கையிட்டு செய்யும் நம் வேலை ஸ்தலங்கள் நமக்கு நன்மையை விளைவிக்கவும்; அதற்கேற்ற சகல சூழ்நிலையும் மாறும்படியாக தேவன் தாமே நமக்கு கட்டளையிடுவார். சகரியா 8:12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக