திங்கள், 18 அக்டோபர், 2021

சுத்தம் பரிசுத்தமாகாது

*சுத்தம் பரிசுத்தமாகாது*

By : Eddy Joel Silsbee

 

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று போற்றப்படுகிற நம்முடைய பிதாவாகிய தேவனே சகலத்தையும் நமக்கு நன்மையாக மாற்றுவாராக.

 

பரிசுத்தம் என்கிற வடசொல்லுக்கு,

முற்றிலும் தூய்மை, மாசின்மை, புனிதம் என்பது தமிழ்.

ஆகவே, பரிசுத்தம் என்ற வார்த்தை *சகலவற்றையும் படைத்த தேவனுக்கே உரியது*. 1பேதுரு 1:16

 

ஊதுபத்திக்கோ சடங்கு சம்பிரதாயத்திற்கோ, கற்பனைக் காவியதிற்கோ இந்த வார்த்தை பொருந்துவதில்லை..

 

மனிதன் தன்னை எவ்வளவு நீரிலும் குளித்து, சோப்பு இட்டு, அழுக்கை சரீரத்திலிருந்து சுரண்டி எடுத்து, தன்னை சுத்தமாக்கி கொள்ளலாம். அதற்கு பெயர் சுத்தம். ஆனால் அது பரிசுத்தம் ஆகிவிடாது !!

 

நம்மை வனைக்கவும், உருவாக்கவும், மேலாக்கவும் கடவுள் ஒருவராலேயே ஆகும். எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி இராஜாக்களோடு உட்கார வைக்க முடியும், சிறியவனை மேன்மை படுத்தி அரசாள வைக்கவும் முடியும். சங். 113:7

 

ஒவ்வொரு வகையான வேண்டுதல் நிறைவேற வெவ்வேறு புனித ஸ்தலமாக;

வாடிகன் என்றும், வேளாங்கன்னி என்றும், எருசலேம் என்றும் தேடி அலைய வேண்டியதில்லை.

 

கடவுளை ஓர் இடத்தில் உட்கார வைத்து விட்டு அங்கு மனிதன் போய் அவரைப் பார்க்க வேண்டுவதில்லை. ஏனென்றால், கடவுளை எந்த மனிதனாலும் ஓர் இடத்தில் பிடித்து அடக்கியும் வைக்க முடியாது !! அப். 17:24, 7:48, 1இரா. 8:27

 

வானங்களும், வானாதி வானங்களும் அவருக்கு கொள்ளாது என்கிறது வேதம். 2நாளா. 2:6, 6:18

 

இரட்சிக்கப்பட்டவர்களின் இருதயத்தில் வசிக்கிறவர். யோ. 14:23

 

அவரை தொழுதுகொள்ளும்படி கூடும் போது நடுவில் இருக்கிறவர். மத். 18:20

 

ஆகவே, அவரவருக்கு தேவையான காரியம் வாய்க்கும்படியாகவோ, பாவத்திற்கு பரிகாரம் தேடியோ வெவ்வேறு இடங்களுக்கு போய் விண்ணப்பத்தை ஏறெடுக்க அவசியமில்லை.

 

இருந்த இடத்திலேயும் அல்லது சிலராக கூடியும் விண்ணப்த்தை இருதயத்திலிருந்து உண்மையாக ஏறெடுக்கும் போது; வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் நம் எளிமையான தாழ்மையான உண்மையான விண்ணப்பத்தை கேட்டு நம்முடைய நன்மைக்கு ஏற்ப பதிலளிப்பார். லூக்கா 18:7, எரே. 33:3, சங். 145:18

 

சகல வல்லமையும் உள்ளவர் நம் தேவன்.

சகல அதிகாரமும் அவர் கையில் தான் இருக்கிறது.

அவரே நம்மை உண்டாக்கினவர்.

அல்லேலுயா ! யாத். 4:11, யோபு 9:9, சங். 94:9, 96:5, 146:6

 

அவரையே உண்மையாய் சார்ந்து நிற்போம்.

சகலத்தையும் நமக்கு நன்மையாய் மாற்றுவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/xZh6g52e-Kk

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக