வெள்ளி, 1 அக்டோபர், 2021

நம் வாழ்விற்கான தேவனது செயல்பாடு நம் கைகளில் உள்ளது

*நம் வாழ்விற்கான தேவனது செயல்பாடு நம் கைகளில் உள்ளது*

By : Eddy Joel Silsbee

 

பூரணராகிய தேவன் நமக்கு சகல அடைக்கலத்தையும் தந்து வழி நடத்துவாராக.

 

ஒரு பணத்திற்கு ஈடாக இருந்த இரண்டே இரண்டு காசுகளையும் அதாவது தனக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் ஆண்டவருக்கென்று காணிக்கை பெட்டியிலே அந்த விதவை போட்டு விட்டார்கள்.

 

ஆதரவற்ற நிலைமை,

ஏழ்மை,

ஆதாரமில்லா வருமானம்,

இனியும் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெலனும் சரீரத்தில் இருக்குமா என்ற கேள்வியோடு;

நம்மை நாமே நிதானித்து கொண்டிருக்கும் மன நிலைமையில்;

*எல்லாவற்றையும் கொடுத்த அந்த பெண்மணி மீது  “இயேசுவின் பார்வைப்பட்டது* !!  மாற்கு 12:42-43

 

தேவனைத் தொழுதுக்கொள்ள கூடும் நேரம் 7 நாட்களுக்குள் வெறும் இரண்டே இரண்டு மணி நேரம் தான்.

 

அந்த இரண்டு மணி நேரத்திலும் 30 நிமிஷம் தான் தேவ செய்தியும்...

 

கையில் இருக்கும் 24 மணி நேரத்தில்,

30 நிமிடங்கள் கூட தேவ செய்தியைக் கேட்க முடியாமல்,

7 நாட்களில் 2 மணி நேரம் கூட கடவுளுக்கென்று ஒதுக்க நமக்கு நேரமில்லாமல் அன்று பிரத்யேகமாக நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும்,

வியாபாரத்தை பார்ப்பதும்,

உறவினர் வந்துவிட்டார்கள் என்று வீட்டில் முடங்குவதும்,

சுற்றுலா செல்வதும்,

இப்படி பலகாரணங்கைக்கூறி தேவனைத் தொழுதுக்கொள்ள வாழ்க்கையில் நேரமில்லையென்றால்; *தேவன் நமக்கு என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்*?

 

சோம்பல் பட்டு,

வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்தோத்திரம் சொல்வதும்,

பாட்டு பாடிக்கொள்வதும் ஆராதனை அல்ல. மற்றவர்களோடு கூடிவரவேண்டும், அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும், மற்றவரின் நற்கிரியைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.... (எபி. 10:24)

 

சிலுவையில் நமக்காக பாடுபட்டு,

அடிக்கப்பட்டு,

இரத்தஞ்சொட்ட சொட்ட மரித்தவரை நினைவுக்கூறுவதற்கு வாரத்தில் ஒருமுறை ஒன்றாக கூடுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது... அதற்கு ஆயிரம் காரணங்கள் முன்வரலாம் !!

 

இருந்தபோதும் அவரது வேலையை எல்லாம் விட்டு நாம் ஜெபிக்கும் ஜெபத்தை அவர் கேட்கவேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

 

அவருக்கே நம் வாழ்க்கையில் முன்னுரிமை கொடுப்போம். தேவன் தன் செயல்பாடுகளில் நம்மை அவர் முன் நிறுத்துவார் !!  நம் கீழ்படிதலின்படியே தேவன் செயல்படுகிறார். மாற்கு 4:24

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/CuAbqK-ttkM

*Please Subscribe & Watch* our YouTube Videos

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக