*கூடுகையில் குத்தாட்டம்*
By : Eddy Joel Silsbee
நேற்றும் இன்றும் என்றும் மாரதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
போலி என்று அறிந்து அதை பயத்துடன் செய்த காலம் போய் இப்போது போலி அங்கீகரிக்கப்பட்டு அதில் பகிரங்கமாயும் துணிகரமாயும் ஈடுபடுகிறார்கள்.
தேவனுக்கு ஆராதனை என்று தொலைகாட்சியில் பாடலை பார்த்து லயிப்பவர்கள்; அதிலுள்ள பாவனையும் பாடலும் *வெவ்வேறு நேரத்தில்* எடுக்கப்பட்டது என்பதை உணர்வது இல்லை.
ஆராதனை என்ற பெயரில் திரையில் பாடும் சிலருக்கு *டப்பிங் கொடுக்கப்படுவதும் உசிதமான கலப்படம்* !!
சினிமா பாட்டு கேட்க கூடாது என்ற கொள்கையில் சினிமாவையும் மிஞ்சும் அளவிற்கு இயேசுவின் பெயரால் பாட்டை பாடி குத்தாட்டமும் டான்ஸும் போடுகிறார்கள்.
அந்த தாக்கத்தில் பலரும் *வாயால் பாடுவதை விட்டு*.. கையாலும் காலாலும் தான் அதை செய்கிறார்கள். ஆராதனை கூடங்கள் என்ற பெயரில் கச்சேரிகளாகி போனது என்பது வேதனை !!
அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு பல இடங்களில் டான்ஸ் மாஸ்டர் வைத்து ஊழியரும் சபையாரும் பாட்டுகளை ஒலித்து ஆராதனையில் ஆடுகிறார்கள்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும் எதிர்பாளர்களும் இரட்சிக்கப்படாதவர் என்றாலும், அவர்களை அழைத்து கிறிஸ்தவ பாடல்களையும் தங்கள் கச்சேரிகளையும் அரங்கேற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்...
*தேவனையா மனிதனையா யாரை மகிமைபடுத்துகிறார்கள்*?
கிறிஸ்தவம் என்கிற பெயரில் வேதத்திற்கு முரண்பாடாக செயல்படுவதை விட்டு சத்தியத்திற்கு திரும்பவேண்டும்.
கர்த்தருடைய கரங்களில் விழுவது பயங்கரமாயிருக்குமே !! (எபி. 10:31)
தன்னுடைய வசனத்தின்படி நம்முடைய செயல்கள் இருக்கின்றனவா என்றே ஒப்பிட்டு பார்த்து தேவன் நம்மை நியாயந்தீர்க்கிறவர். யோ. 12:48
ஆகவே பாடலானாலும் (கொலோ. 3:16) செய்தியானாலும் (2கொரி. 4:2, 2தீமோ. 2:15) ஜெபமானாலும் (எபே. 3:15) காணிக்கையானாலும் (1கொரி. 16:1-2) கர்த்தருடைய பந்தியானாலும் (அப். 20:7, ரோ. 6:1-5) – தேவகட்டளைப்படியே செயல்படுத்துவோம்.
சகலமும் ஒழுக்கமாய் நடக்கவேண்டும் என்பது வேதக்கட்டளை. 1கொரி. 14:40
தேவன் தாமே நமக்கு சகலத்தையும் நம்மையாய் மாற்றித்தருவாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக