*சலுகையே இல்லை*
By : Eddy Joel Silsbee
முழுமையாய் நம்மை இரட்சிக்கும் தேவனே நம்மை இன்னும் பெலப்படுத்தி வழிநடத்துவாராக.
தேவனுக்கு முன் எவரும் விதிவிலக்கு அல்ல.
எகிப்திற்கு போய் இஸ்ரவேலர்களை அழைத்து வரும்படி நேரடியாய் தேவனிடத்தில் இருந்தே கட்டளை பெற்று இருந்தார் மோசே. யாத். 3:10
தாம் அனுப்பின வேலையை தானே செய்யப் போகிறார் என்று தேவன் மோசேக்கு சலுகை காட்டிவிடவில்லை.
சின்ன பிள்ளை என்றோ,
வலி தாங்கமாட்டான் என்றோ,
எனக்கென்ன அது உங்க பாடு என்றோ,
எங்கள் ஊரில் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்றோ,
இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் 8ம் நாளில் தங்கள் குமாரனுக்கு செய்ய வேண்டிய விருத்தசேதனத்தை செய்யவிடாமல் மோசேயின் மனைவியாகிய சிப்போராள் தடுத்திருக்கிறாள்.
தன் தவறை உணர்ந்து,
தன் செயலினால் சொந்தக் கணவனை பறிகொடுத்து விடாமல்,
அவனை தக்கவைத்துக் கொள்ள பிள்ளையின் வேதனையை பொருட்படுத்தாமல் *தாயாகிய சிப்போராளே* தன் மகனது நுனித்தோலை வெட்டிபோட்டார். யாத். 4:24-25.
இந்த சம்பவம் குறித்த அதிக விபரங்களை அறிய நமது *கேள்வி & வேதாகம பதில் #154ஐ* வாசிக்கவும்.
எந்த சூழ்நிலையானாலும் தேவன் கட்டளையிட்டதை செய்யவேண்டியது அவசியம். அதில் நாம் தவறவேக் கூடாது.
தேவனுக்கு ஊழியம் செய்கிறதாயிருந்தாலும் ஞானஸ்நானம் என்பது அவசியேமே. கொலோ. 2:11-12. *ஞானஸ்நானமே எடுக்காமல் ஊழியம் செய்பவர்கள் வேதத்திற்கு முரணானவர்கள்*.
சிறியதோ, பெரியதோ… தேவனது கட்டளையை மீறினால் தேவன் அதை நம்மிடம் நிச்சயம் கேட்பார்!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக