*வேலை செய்வது சாபமல்ல*
by : Eddy Joel Silsbee
சகல கிரியையையும் மேன்மையாய் நடப்பிக்கிற கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வேலை செய்வதும்,
உழைத்து சாப்பிடுவதும்,
*சாபம் அல்ல, அது ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதம்*.
தேவ வார்த்தையை மீறி *பாவம் செய்யும் முன்பே (ஆதி. 2:15), வேலை செய்யும்படி கட்டளையிட்டார் தேவன்*.
சரீர ஆரோக்கியம் இருந்தும் ஒரு வேலையும் செய்யாமல், எந்த காரணமுமின்றி ஆண்கள் சோம்பலாய் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருப்பது தகாதது. அந்த வீடு வளர்ச்சி காணாது. பிர. 10:18
நீதிமொழிகளில் ஆவியானவர் சொல்லுவது... வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, *பின்பு உன் வீட்டைக் கட்டு* (நீதி. 24:27) என்பது.
காலையிலும் மாலையிலும் வேலை செய்ய நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். பிரசங்கி 11:6
சம்பாத்தியத்தை சேமிக்கும்படியான கட்டளை நமக்கிருக்கிறது. யோ. 6:12...
சூரியன் அஸ்தமிக்கும் போது, நாம் ஓய்வு எடுக்கும் நேரம். ஆதி. 15:12, உபா. 23:11
நம்முடைய பிரயாசத்தை, தேவன் கணக்கில் வைத்து அதை நிறைவேற்றுகிறார். பிர. 3:13, சங். 128:2, ஏசா. 62:8
ஆசீர்வாதம் நமக்கென்று முன்னமே வைக்கப்பட்டிருகிறது.
நாம் பிரயாசப்படும் போது, அதை அடைகிறோம்...எபி. 6:10
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக