*கடைசிபடியை முதலில் எப்படித்துவங்குவது?*
by : Eddy Joel Silsbee
அனுதினமும் நம்மோடு இடைபடும் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஆவியானவர் வெளிபடுத்தினார்,
ஆவியானவர் பேசினார்,
ஆவியானவர் சொன்னார் என்று சொல்லப்படும் கூற்றுகளை ஆர்வத்தோடும் பக்தியோடும் கேட்கிறோம்.
இயேசு கிறிஸ்து *சொன்னவைகளை*,
நாம் *படித்துத்* தேறும்படியாக,
அப்போஸ்தலர்கள் அவைகளை சரியாக, நேர்த்தியாக எழுதிவைக்க *அவர்களுக்கு தேவ ஆவியானவர்* கொடுக்கப்பட்டு,
இயேசு சொன்னவைகளை *அவர்களுக்கு நினைப்பூட்டுவார்* என்று அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. யோ. 14:26
நாம், ஒழுங்காக வேதத்தை வாசித்தும்,
எழுதப்பட்டவைகள் நமக்கு நினைப்பூட்டபட்டாலும்,
நமக்கிருக்கும் துன்பத்தினால்,
சில வேளைகளில் ஜெபிக்கக்கூட முடியாமல் விக்கி நிற்கும் போது, ஆவியானவர் *நமக்காக பிதாவினிடத்தில் வேண்டுதலும்* செய்கிறார். ரோமர் 8:26.
ஆனால், “வேதத்தில் எழுதப்பட்டிராததை” ஆவியானவர் பேசினார் என்று சபையாரிடம் கண்ணீரோடும் உணர்ச்சிபூர்வமாகவும் சொந்த கற்பனைகளை சொல்லும்போது எவரும் அதற்கேற்ற ஆக்கினையை தங்களுக்கு வருவித்துக்கொள்கிறார்கள். யாக். 3:1
தேர்ச்சி பெற விரும்புகிற,
வளரும் ஊழியாக்காரருக்கு,
*பிரசங்கிப்பதில் எப்படி வளரலாம்* என்ற ஆலோசனையை,
தேவனால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான, கைதேர்ந்த, மூத்த ஊழியர் பவுல் கொடுக்கும் ஆலோசனையின் “வளர்ச்சிப் படிகளை வாசித்து பாருங்கள்” ... 1-> ... 2-> ... 3-> 1தீமோ. 4:13
இந்த வரிசைப்படியே முன்னேற வேண்டும்…
*கடைசி படியை, முதலில் துவங்கி விடகூடாது*
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக