புதன், 18 ஆகஸ்ட், 2021

விளம்பரமில்லா உதவிகள்

*விளம்பரமில்லா உதவிகள்*

by : Eddy Joel Silsbee

 

பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

வலது கை செய்யும் நன்மை இடது கைக்குக்கூட தெரியாமல் செய்யவேண்டும் என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னார். மத். 6:3.

 

நியாயபிரமாணப்படி செய்ய வேண்டியதை பூர்த்திசெய்வதற்காக “வேறு யாரிடத்துலேயும் சொல்லாமல் ஆசாரியனிடத்தில் போய் உன்னைக் காண்பி என்றார் தன்னிடம் சுகம் பெற்றுக்கொண்டவனிடம்… மத். 8:3-4, லேவி. 13.

 

பரிசேய ஆசாரியர்களோ; தான் செய்யும் அற்புதத்தை விளம்பரப்படுத்தும்படி இயேசுவுக்கு ஆலோசனை சொன்னார்கள். யோவான் 7:4

 

ஆம்,

ஜனங்களுக்கு செய்த உதவியை, புகைபடம் எடுத்து விளம்பர படுத்துவது பரிசேயத்தனம்… கிறிஸ்தவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.

 

வேறொருவர் கொடுத்த பணத்தில் நலஉதவிகளை நிறைவேற்றும் போது, ஆதாரத்திற்காக புகைப்படம் எடுக்கவேண்டியுள்ளது. ஆனால், அதை சுயவிளம்பரமாக்கக்கூடாது.

 

நம்முடைய தாலந்தை, நாம் பிரசித்தம் பண்ணாமல் (நீதி. 20:6) கடமையை மறக்காமலும், மறுக்காமலும் செய்வோம்..

 

நம் முயற்சிக்கு *நாமே பலன் தேடி கொண்டால் தேவன் அமைதியாய் இருப்பார்*.. நாமே செய்த உதவிக்கு விளம்பரப்படுத்தினால் அதற்கான *பரத்திலிருந்து வரும் பலன் வராமல் போகலாம்* மத். 6:18

 

தன் கையில் உள்ளதை செலவழிக்காமல் பத்திரப்படுத்திக்கொண்டு,

வேறொருவரிடம் பணத்தை வாங்கி,

மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது உதவி அல்ல !!

சுய சம்பாத்தியத்திலிருந்து உதவ முன்வருவோம்.

 

தேவன் நம்மை இன்னும் அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பார். 2கொரி.8:11-12

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/kmIgeVlq63w

*Please Subscribe & Watch our YouTube Videos*

 

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக