ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

காக்கை பிடித்தலும் விளம்பர ஜெபமும் வீண்

*காக்கை பிடித்தலும் விளம்பர ஜெபமும் வீண்

by : Eddy Joel Silsbee

 

தேவ குமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எப்படியாயினும் எவருடைய கால் அல்லது கை (காக்கை) பிடித்து கெஞ்சியாவது தனக்கு நடக்கவேண்டிய காரியத்தை சாதித்து விடலாம் என்று சிலர் நினைப்பதுண்டு.

 

ஆனால், யாரை தாஜா பண்ணினாலும், *ஆண்டவர் தான் அதை வாய்க்க பண்ணமுடியுமாம்*.  எஸ்ரா 7:27-28; நெகே. 1:11;

 

வீட்டுக்குள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது,

வெளியே, தனியறையில் மிகவும் பாதுகாப்பாக,

பலஅடுக்கு சிப்பாய்களால் காவல் செய்யப்பட்ட *சிறையே உடைந்தது* அப். 12:5..

 

செய்யும் ஜெபத்துடன்,

தானதர்மங்களும் சேர்ந்துக் செய்துக்கொண்டபோது *விண்ணப்பம் வானத்துக்கு எட்டினது* அப். 10:4.

 

கதவைப்பூட்டி,

வீட்டுக்குள்ளையே,

மண்டியிட்டு,

இரகசியமாய்,

ஜெபிக்கும் ஜெபத்தின் மூலம்,

வானத்தின் கதவை நம்மால் தட்ட முடியும் என்பதால்,

*நமக்கு பதில் கொடுக்கக் காத்திருக்கும் தேவனை உத்தமமாய் அணுகுவோம்*. மத். 6:6

 

அதைவிட்டு, ஊரைக்கூட்டி, விளம்பரம் கொடுத்து, மேடை போட்டு, இப்போது நான் ஜெபிக்கப்போகிறேன் என்று வாட்ஸப்பில் அறிவித்து அல்லேலூயா ஸோத்ரம் என்று கதறினாலும் அந்த விளம்பரத்தின் பலன் தான் மிஞ்சும். அவ்வாறு ஜெபிக்கும் ஜெபம் தேவனிடத்தில் சேருமா என்பது மத். 6:5-6ன்படி பெரியக் கேள்விக்குறியே.

 

உத்தமமாய் ஜெபிக்கும் ஜெபத்திற்கு பதில் தானாக வரும். நாம் போய் கால்கை பிடிக்கவேண்டாம், நாம் உத்தமமாயிருந்தால் சம்பந்தப்பட்டவர்களையே நம்மை தேடி வர வைப்பார் நம் ஆண்டவர். நீதி. 29:26, சங். 20:9, சங். 62:12

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/4m0B1zJMaZs

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக