*கன்மலைத் தேன் பெறுவது சுலபமல்ல*
By : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன் (சங். 81:16) என்பது தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்.
கன்மலை என்றதும் உயரமான மலை தான் ஞாபகம் வரும். ஆனால் பரிசுத்த ஆவியானவர், நம்முடைய கஷ்டங்களை தான் மலையாக குறிப்பிடுகிறார்.
தாவீதின் வாழ்க்கை ஒரு கன்மலை. முடிவில் தித்திக்கும் சங்கீதங்களும், தேவனே அவரைகுறித்து சாட்சிக்கொடுக்கும் தேனும் வெளிவந்தது.
யோசேப்பு சுமார் 13 வருடங்களாக கன்மலை போன்ற கஷ்டத்தில் வாழ்ந்தார். அவரது சகோதரர்கள், அப்பா, அம்மா, தங்கை, சொந்த ஊர், நடக்கையில் உத்தமம் என்று எல்லாம் இருந்தும் கன்மலையாகிய அடிமைதனமும் ஜெயிலும் கிடைத்தது.. ..
ஆனால், முடிவில் தித்திக்கும் தேனாக எகிப்திற்கே அதிபதியாக தேசத்தின் 2ம் ஸ்தானத்தில் உட்கார்ந்தார்.
நம்முடைய கண்மலை எதுவாக இருந்தாலும், உத்தமமாய் நிற்கும் போது, நிச்சயம் அந்த கன்மலையின் வழியாகவே தேவன் நமக்கு தித்திக்கும் தேனாகிய மேன்மையானப் பலனைக் கொடுப்பார்.
உறுதியோடு உத்தமத்தில் நிற்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக