*தர்ஷீசுக்குள் ஓடவேண்டாம்*
By : Eddy Joel Silsbee
நன்மையான எந்த காரியத்தையும் அருளும் நம் பிதாவின் நேசக் குமாரனாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மற்றவர்களுக்கு நாம் பிரயோஜனப்பட வேண்டும் என்பது தேவனின் சித்தம். நமக்கு நாமே வாழ்ந்து கொள்வது கிறிஸ்தவம் அல்ல.
யோனாவிடம், அழிவு வரப்போகிறது என்று அறிவிக்கும்படி நினிவே பட்டணத்து ஜனங்களுக்கு போய் சொல் என்றார் தேவன்.
ஊழியத்திற்குப் போவதாக தன்னைத் தான் ஏமாற்றிக்கொண்டு, சொல்லப்பட்ட இடத்தை விட்டு தனக்கு இஷ்டமான ஊராகிய தர்ஷீசுக்கு மாறிப் போனார். (யோனா 1:3)
ஜனம் பாவத்தில் கிடக்கிறது என்று நம்மை இரட்சித்ததும் அல்லாமல், சகல இடங்களிலும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பது ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்த கடமை. (மத். 28:19)
வேலை / குடும்பம் / இயலாமை / பிஸி / வயது போதாது / அனுபவம் போதாது என்று எந்தக் கிறிஸ்தவனும் சுமார் *550 மைல் பக்கத்திலுள்ள நினிவேக்குப் போகாமல், தனக்குப் பிடித்ததும் வசதியுமான 2500 மைலுக்கப்பாலுள்ள தர்ஷீசுக்குள்* ஓடி தஞ்சம் கொள்ள முயற்சிக்கக்கூடாது.
கடல் கொந்தளித்து, புயல் அடித்து, தன்னை ஆதரித்த அனைவரும் சேர்ந்து கடலில் தூக்கி போடுவதற்கு முன்னும், மீன் சுவாசத்தில் வாழ துவங்குவதற்கு முன்னும் நமக்கு ஒப்புவிக்கப்பட்ட கடமையை செய்ய முற்படுவோம்.
நம்மை புதிய வஸ்திரம் உடுத்தி அங்கீகரித்து அலங்கரித்து ஆசீர்வதிக்க வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார். லூக்கா 15:20-22
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக