செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கிறிஸ்துவைத் தூரப்படுத்தும் பகையுணர்வு

*கிறிஸ்துவைத் தூரப்படுத்தும் பகையுணர்வு*

By : Eddy Joel Silsbee

 

இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ள தேவன் நம்மை நேர்த்தியாய் வழிநடத்துவாராக.

 

இவர் இரட்சகர், தீர்க்கதரிசி, மேசியா என்றும்;

மற்றவர்கள் சொல்லி அல்ல எங்கள் சொந்த புத்தியில் இவரே மெய்யான கிறிஸ்து என்றும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் சமாரியர்கள்.

 

மேலும், தன் வழியில் சென்றுக் கொண்டிருந்தவரை நிறுத்தி இன்னும் இரண்டு நாள் தங்கள் ஊரில் *தங்கும்படி வற்புறுத்தி* இயேசு கிறிஸ்துவின் மீது தங்களுடைய *அன்பை வாரி பொழிந்தனர்*. (யோ. 4:39-42)

 

ஆனால், தன் பயணத்தை முடித்து அதே ஊர்வழியே மறுபடியும் திரும்பிய போதோ, 2நாள் எங்கள் ஊரில் தங்கவேண்டும் என்று வற்புறுத்திய அந்த ஜனங்களின் மனம் இப்போது இயேசுவின் மேற்படி பயணம் எதிரி ஊரான எருசலேமை நோக்கி இருந்ததால் அந்த ஊரார் இயேசுவை தங்கள் ஊருக்குள்ளே ஏற்க மறுத்தனர் !! (லூக் 9:52-53)

 

இயேசுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் பகையுணர்வு மோசமாய் இருந்தது.

 

வடக்கிற்கும் தெற்கிற்குமான தூரத்தை ங்கள் அன்பில் வெளிப்படுத்துகிற சபைகளும், கிறிஸ்தவர்களும், ஊழியர்களும் இருப்பது வேதனை !!

 

ஆம்... வெறுப்பும் பகையுணர்வும் நம்முடைய இரட்சிப்பிற்குத் தடை.

 

பகை உணர்வை உதறி தள்ள வேண்டும்.

 

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?  நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. 1கொரி. 6:7-8

 

தவறு செய்தவர் நீங்களானாலும் மற்றவரானாலும்...*தேவனுடைய சமூகத்தை நாடுகிறவர்களே முதலாவது தங்களை சரிபடுத்திக்கொள்ளவேண்டும் !! ஆம்… உங்கள் பகையை நீங்கள் ஒப்புரவாக்காமல் ஏறெடுக்கும் எந்த ஜெபமும் நம்முடனே பத்திரமாயிருக்கும் ???

 

வேதாகமத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் இந்த தீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயம் உண்டு. மத். 5:23-24; 18:15-17, ரோ. 12:18

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*                                         

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/UmQQfxle0PU

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக