*கிறிஸ்தவத்தில் அசைவம் புசிக்கத்தடையில்லை* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 1 August
by : Eddy Joel Silsbee
உன்னதமான தேவன் நம்மை இன்னும் பரிசுத்தப்படுத்துவாராக !
ஆதியாகமம் 1:27-30ன் படி, மனுஷன் மாமிசம் சாப்பிடக் கூடாதென்றும் பிரத்தியட்சமாய் 29ம் வசனத்தில் விதைத்தரும் சகலவிதப் பூண்டுகளையும், கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் தேவன் கொடுத்தார் என்பதால் கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடவேக்கூடாதென்றார் ஒருவர் !!
வேதாகமத்தை ஆங்காங்கே படித்து மூடி விட்டால் இப்படியாகிவிடும்.
இந்தக்கூற்றை ஆதரிப்பவர்கள் கீழேயுள்ள வசனங்களையும் படித்துத் தெளிவுபெறலாம் :
“ஆதி. 9:3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்” என்ற கட்டளை நோவா கால பேரழிவிற்கு பின்னர் வந்ததை நாம் கவனிக்கத் தவறகூடாது.
இயேசு கிறிஸ்து மீன் சாப்பிட்டார் – லூக்கா 24:42-43
ஆட்டுக்கறியும் சாப்பிட்டார் – லூக்கா 22:8-15
எல்லாமே பரிசுத்தமான உணவு தான் – அப். 10:10-15
இருதயத்தில் பலவீனமானவர்கள் மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறார்கள். ரோ. 14:2
மாம்சம் புசியாதிருக்கிறவர்களை அற்பமாகவோ மேன்மையாகவோ எவரும் எவரையும் எண்ணக்கூடாது.
மாம்சம் புசியாதிருக்கிறவர்களை குற்றபடுத்தவும் யாருக்கும் அதிகாரம் இல்லை !! ரோ. 14:3
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. 1தீமோ. 4:4
எதுவும் தீட்டல்ல என்றறியவேண்டும். தீட்டு என்று எண்ணிக்கொள்ளுகிறவனுக்கே அது தீட்டுள்ளதாயிருக்கும். ரோ. 14:14
தேவனுடைய கிரியையான மாம்ச போஜனத்தை அற்பமாக எண்ணவேண்டாம்.
எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்…
இந்தியர்கள் பெரும்பாலும் ஆட்டிறைச்சியை பிரியமுடன் சாப்பிடுவார்கள். தாய்லாந்து, சைனா மற்றும் அந்தப்பகுதிவாழ் இனத்தவருக்கோ நாய் & பாம்பு இறைச்சியில் அலாதிப்பிரியம் !!
அருகாமையில் உள்ளவர்களுக்கு இடறலுண்டாகப் புசிக்க கூடாது. அதுவே புசிப்பவனுக்கு தீமையாயிருக்கும். ரோ. 14:20, 1கொரி. 8:13
அனைவரையும் கிறிஸ்துவிற்கென்று ஆதாயப்படுத்துவதே பிரதான நோக்கமாயிருக்கட்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக