*நீதிமான் உறுதியாய் இருப்பான்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 30 July
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் நம்மை வழிநடத்துவாராக.
ஒருவரைக் குறித்து எப்போதும் புரளி பேசி கொண்டிருந்தவர்கள், அவர் இறந்துப் போனதும் அவர் செய்த நன்மையை சொல்லி, அவர் நல்லவர், மேன்மையானவர், அமைதியானவர் திறமையானவர் என்பார்கள்.
இனி எவ்வளவு முயற்சித்தாலும் இந்த உலகத்தில் மரித்தவர் திரும்பி வரப்போவது இல்லை. எபி. 9:27
நீதிமானோ மரணத்தில் நம்பிக்கை உள்ளவன் என்று பிரசங்கி சொல்கிறார். நீதி. 14:32
அவனுக்கு துன்பங்களும் துரோகங்களும் அவமானங்களும் நெருக்கங்களும் எப்போதும் சூழ்ந்து இருந்தாலும், தேவன் அறிந்து இருக்கிறார் என்பதை நீதிமான் அறிகிறான். 1கொரி. 1:8, சங். 37:24, மீகா 7:8
எந்த சூழ்நிலையினாலும் தான் புடமிடப்பட்டாலும் இன்னும் சிறந்து விளங்குவான். ஏசா. 48:10, எசே. 22:18-22
விசுவாசமும் நம்பிக்கையும் நம்மை சிலுவைக்கு கொண்டு சென்றாலும் வாக்குத்தத்தத்தை விடாமல் பற்றிக்கொள்ளும் போது மாத்திரமே ஜெயம் பெறுவோம். மாற்கு 13:13
உறுதியுடன் இருப்போம். தேவன் நம்மை ஆதரிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/e5cLrEV0vxs
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக