புதன், 28 ஜூலை, 2021

பிள்ளைகளின் ஒழுங்கு- தினசரி சிந்தனைக்கான வேத துளி

*பிள்ளைகளின் ஒழுங்கு* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 28 July

by : Eddy Joel Silsbee

 

சிரிஷ்டிப்பின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக..

 

*பிள்ளைகள்* :

-ஜெபிக்காமல் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்று பெற்றோர் எப்போதும் வலியுறுத்த வேண்டும். (தானி. 9:4). நாம் அல்ல அவரே அவர்களைப் பாதுகாக்கிறவர்.

 

-ஆசிர்வாதம் தொடரவும், புத்தியும் அறிவும் வளர வேதம் வாசிக்க அவர்களைப் பழக்க வேண்டும் (யோசு. 1:8, சங். 119:99)

 

-பெற்றோரை கனம் பண்ண வேண்டும் (யாத். 20:12)

 

-எல்லாக் காரியத்திலேயும் சத்தியத்திற்கு உட்பட்டு பெற்றாருக்கு கீழ்ப்படியுங்கள் (எபே. 6:1); இது கர்த்தருக்குப் பிரியமானது (கொலோ. 3:20)

 

-சங்கடங்களும், அதிருப்திகளும், தோல்விகளும், நினைத்தது நடக்காத சூழ்நிலைகளும் வந்தால் சோர்ந்து போகாமல், தேவனை நோக்கி பார்க்க வேண்டும் (எபி. 12:3,5)

 

-தேவன் நமக்கென்று ஒரு விசேஷ திறமையை நிச்சயம் கொடுத்திருக்கிறார். அதை உணர்ந்து அறிந்து வளர வேண்டும். (மத். 25:24)

 

-சோம்பலாய் முடங்கி கிடந்தால் உள்ளதும், அல்லது மொத்தமும்  இழக்க நேரிடும் (பிர. 10:16)

 

-அவசியமில்லாமல் ஊர் சுற்றினால் குற்றம் செய்ய நேரிடும் (2சாமு. 11:2)

 

-ஞானத்தையும் புத்தியையும் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

-அழகானாலும், சுமாரானாலும், வெள்ளையானாலும், அழகே இல்லையென்று நீங்கள் உங்களை நினைத்துக்கொண்டாலும், சிவப்போ கருப்போ, தீய்ந்து போனதோ வெந்து போனதோ அவையெல்லாம் வெறும் வெளித்தோற்றமே.... ஆனால், எந்த வித்தியாசமும் வெளித்தோற்றத்தையும் பாராமல் அனைவரையும் ஒரேவிதமாக, வெகு விசேஷமாய் நேசிக்கிறவர் நம் தேவன் ஒருவரே (யாக். 1:5)

 

அவரைப் பற்றிக்கொண்டால் உலகையே ஜெயிக்கலாம். 1யோ. 5:5

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Gi5DhkPjj-A

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக