வெள்ளி, 16 ஜூலை, 2021

வாரத்தின் முதல் நாளிலா அல்லது அநுதினமுமா?

* வாரத்தின் முதல் நாளிலா அல்லது அநுதினமுமா?*

by : Eddy Joel Silsbee

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அனுதினமும் கூடினார்கள் என்று அப் 2:46ல் இருக்கும் போது தேவனைத் தொழுதுக் கொள்ள வாரத்தின் முதல் நாள் ஞாயிறு ஏன் கூடி வரவேண்டும்?

 

குறிப்பாக அப் 2:46ஆம் வசனத்தில் இரண்டு இடங்களைக் கவனிக்க வேண்டும்.

 

ஒன்று தேவாலயம்,

இரண்டு வீடுகள்தோறும் !!

 

ஆம்,

இரட்சிக்கப்பட்ட யூதக் கிறிஸ்தவர்கள் தங்கள் யூத வழக்கப்படி அநுதின தியான வேளையில் எருசலேம் தேவாலயத்திலும், தங்கள் தங்கள் வீடுகளில் ஒன்று கூடி அநுதின உணவையும் தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டார்கள். உபா. 12:7, 12, 16:11.

 

அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் *அப்பம்பிட்டு ஆராதித்தார்கள் என்று வசனம் சொல்லவில்லை* !!

 

மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் *போஜனம்பண்ணி*, என்றே வேதத்தில் உள்ளது.

 

தேவனைத் தொழுது கொள்ளும்படி பிரத்யேகமாக *ஓய்வு நாளான சனிக்கிழமையில் அல்ல* மறு நாளான வாரத்தின் முதல் நாளான ஞாயிறு அன்று கூடினார்கள்.

 

*ஏன் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாயிற்று*?

 

1-இயேசு கிறிஸ்து  உயிர்தெழுந்த நாள் மாற்கு 16:9

 

2-உயிர்தெழுந்த பின் பரமேறும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக். 24:34; 24:13-15; 33,36, யோ. 20:19; 26

 

3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேறும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினதாக வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. யோ. 20:19, 26, அப். 2:1

 

4- சபை ஸ்தாபிக்கப்பட்ட நாள். அப். 2:1

 

5- பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலருக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட நாள் அப். 2:1-4

 

6-அப்பம் பிட்கும்படி கூடின நாள். அப். 20:7

 

7- காணிக்கை சேர்க்கும்படி கூடின நாள். 1கொரி. 16:1-3

 

** இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயபிரமாணமானது கிறிஸ்து சிலுவையில் நிறைவுபெற்றதால் 7ம் நாள் ஓய்வு நாள் என்பதும் முடிவிற்கு வந்து புதிய பிரமாணமான கிறிஸ்துவின் பிரமாணம் நடைமுறைக்கு வந்தது.. ரோ. 10:4, 1கொரி. 11:25

 

** மற்ற அனைத்து நாட்களிலும் தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தும்படி தேவனை துதித்து தியானித்தாலும்; கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலருடைய உபதேசத்தின் படி வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவனைத் தொழுதுக்கொள்ள கூடி வர வேண்டும். அதை தவற விடக்கூடாது.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/LQA6oNtkQXc

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக