*அருகிலுள்ள லாசரு* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 19 July
by : Eddy Joel Silsbee
சகலத்தையும் நன்மையாய் நடத்துகிற தேவனே நம்மை ஆசீர்வதிப்பாராக.
இது தேவை, அது வேண்டும், ஆசீர்வதியும், சமாதானத்தை தாரும், சுகம் தாரும், அற்புதம் செய்யும், தேவைகளை சந்தியும், பெலன் தாரும், என்று தேவனிடம் நாம் கேட்டுக் கேட்டே பழகி விட்டோம்.
ஜெபத்தின் துவக்கமாயிற்றே என்ற கடமைக்கென்று ஆரம்பத்தில் கொஞ்சம் கடவுளைப் புகழ்ந்து சொல்லிவிட்டு, நேரடியாக நம் தேவைகளையும் விண்ணப்பங்களையும் முன் வைத்துவிடுகிறோம்.
தேவைகள் வாழ்வில் ஒரு நாளும் நிறைவு பெறாது.
வியாதி இருந்தாலும், கஷ்டம் இருந்தாலும், கடன் இருந்தாலும், பிரச்சனை இருந்தாலும், ஜீவனையும் சுவாசத்தையும் கொடுத்து நம்மை ஜீவனோடு இன்றைக்கும் வைத்திருக்கிறாரே இது எவ்வளவு பெரிய காரியம். (அப். 17:25-26)
உலகமே கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டாலும்,
ஊரெல்லாம் கலவரமாக இருந்தாலும்,
கொத்து கொத்தாக மடிந்தாலும்,
வறுமையும் துன்பமும் தலைவிரித்து ஆடினாலும்,
உண்பதற்கு அடுத்த வேளை ஆகாரம் இல்லாவிட்டாலும்,
கொடிய வியாதியால் பிடிக்கப்பட்டாலும் இவை அனைத்தும் இந்த சரீரத்தில் ஜீவன் இருக்கும் வரை தான்.
Busyயாக, ருசியுடன் சாப்பிட்டு கொண்டிருந்தவனுடைய *ஆகாரம் நிறைந்த கையானது வாய் வரைக்கும் போகும் வழியில்* ஏதாவது தவறி விழுந்தால் அதை எடுத்தாவது தன் கொடும் பசியை ஆற்றக் காத்துக் கிடந்த லாசருவின் நிரந்தர சந்தோஷத்தை அடையும்படி தேவன் அநுக்கிரகம் செய்தாரல்லவா !! லூக்கா 16:21, 23
தான் ஐசுவரியவான் என்று ஊர் அறிய வாழ்பவன்,
தன் சாப்பாட்டு மேஜை அருகில் கொடிய வியாதியுடனும் கொடும் பசியுடனும் ஏங்கி கொண்டிருந்த *லாசருவை மறப்பவருக்கு,*
சொந்த சரீரத்தில் சூடு வைக்கப்படும் போது தான் உதாசீனப்படுத்திய *லாசருவின் விரல்கள் கூட ஞாபகம் வரும்* !! லூக்கா 16:19, 24
இருக்கும் கொஞ்ச பெலத்திலாகிலும் தேவனை பற்றிக் கொள்ளவும், அண்டியிருக்கும் துன்பத்தில் உள்ளவர்களை உதாசீனப்படுத்தாமலும் இருப்போம்.
இம்மட்டும் நம்மை அற்புதமாய் நடத்தின தேவனுக்கு கடமைக்காக அல்ல உணர்வோடு நன்றிகளையும் துதிகளையும் ஏறெடுப்போம்..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/iBSnKkNlb38
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக