*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
ஊழியர்களை கனப்படுத்தும் கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன்னுடைய வார்த்தையை எடுத்து செல்பவர்களை தேவன் விசாரிக்கிறவராக இருக்கிறார் (சங். 9:10)
தேவனுடைய வார்த்தையை தாங்கி செல்பவரின் வம்சம் ஆசீர்வதிக்கப்படுகிறது (சங். 37:25)
அவர்கள் எந்த சூழ்நிலையிலும் காக்கப்படுவார்கள் (சங். 37:28)
துன்பங்களும் நெருக்கங்களும் போராட்டங்களும் ஊழியர்களுக்கு ஏராளம் வரும். ஆனாலும் எல்லாவற்றையும் தேவனுடைய நீதியில் நிலைதிருப்பதன் நிமித்தம் ஜெயம் பெறுவார்கள் (2கொரி. 4:9)
உண்மையோடும் உத்தமத்தோடும் ஊழியம் செய்யும் ஊழியர்களை அந்தந்த சபையார் அதிக கனத்தோடும் மரியாதையோடும் அவரிடம் நடந்து கொள்ள வேண்டும் (1தெச. 5:12)
அவர்களுக்கும் குடும்பமும் பிள்ளைகளும் அனுதின வேலைகளும் இருந்தாலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சபையாரின் அனுதின காரியங்களுக்காக நேரம் செலவிடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது (1தெச. 5:13)
சபையாரிடம் அன்பாக பரிவாக நடந்து கொள்ளும்படியாக தன் சொந்த துக்க மனநிலையையும் மறைத்து உங்கள் ஆசீர்வாதத்திற்காக மன்றாடுபவர்கள் (2கொரி. 12:15)
தங்கள் பலவீனத்தை பாராதபடி உங்கள் பலத்திற்காக ஊழியம் செய்பவர்களை தாங்க வேண்டும் (2கொரி. 13:9)
நீங்கள் வளரவேண்டும் என்று தங்களை வீணராக்கி கொள்பவர்களை மேன்மை படுத்த வேண்டும் (1கொரி. 4:10)
உங்களுக்காக எப்போதும் ஜெபிக்கற உங்கள் ஊழியருடைய குடும்பத்திற்காகவும், அவர் ஊழியம் எப்போதும் தேவனுடைய வார்த்தையால் நிரம்பியிருக்கும்படியும், தைரியமாக எப்போதும் தேவ வார்த்தையை எங்கும் பிரசங்கிக்கும்படியும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷரிடத்தில் அகப்படாமல் இருக்கும்படியும் ஜெபித்து கொள்ளுங்கள் (2தெச. 3:2, 1தெச. 5:25, கொலோ. 4:4)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக