#1100 - *காம் தவறு செய்திருக்க, காமின் மகனான கானானை நோவா ஏன் சபிக்கவேண்டும்*? ஆதி. 9:22-25
*பதில்* : தன் தகப்பன் (நோவா) நிர்வாணமாக கிடப்பதைக் கண்ட காம், தகப்பனது வஸ்திரத்தைக் கொண்டு மூடுவதற்கு பதில் வெளியே உள்ள தன்னுடைய மற்ற இரண்டு சகோதரருக்கு பறைசாற்றினதை அறிந்த நோவா இந்த தீர்மானத்திற்கு வருகிறார். ஆதி. 9:21-22
“நிர்வாணத்தைக் கண்டு (வ22)“ என்ற இந்த கூற்றுக்கு வேறு விதமான நம்பக்கூடிய அர்த்தங்களை சில வேத வல்லுனர்கள் கூறினாலும், அந்தக் கருத்துக்களை இங்கு பதிய விரும்பவில்லை.
இந்தச் சூழ்நிலையில், காமின் மகனான கானானின் உண்மைத் தன்மை (நடவடிக்கை) என்னவென்று நமக்கு இங்கு தெரிவிக்கப்படவில்லை.
தாயைப்போலப் பிள்ளை நூலைப் போல சேலை என்ற பழமொழி நமக்குத் தெரியும். ஆதாமின் பாவத்தில் உலகமனைத்தும் பாவத்திற்குள்ளாக்கப்பட்டது போல பெற்றோரின் பழக்கத்தையே பிள்ளைகள் பின்பற்றுவார்கள்.
நோவாவுக்கும் காமுக்கும் இடையிலானது, பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான ஒன்றாகும்.
காமின் முட்டாள்தனமானது தலைமுறைகளாக தொடரப் போவதாகக் நோவா கூறுகிறார். இதனிமித்தமே, கானானின் தலைமுறையானது, நோவாவின் மற்ற மகன்களின் சந்ததியினருக்கு சேவை செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். ஆதி. 9:25-27
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக