*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 17 May 2021
by : Eddy Joel Silsbee
நம் மீது எப்போதும் கரிசனையாய் இருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜனங்கள் மீது இருந்த கோபத்தில், தன் சொந்த கரங்களால் தேவனே எழுதி மோசேக்கு கொடுத்த அந்த இரண்டு கற்பலகைகளையும், உடைத்துப்போட்டார் மோசே. யாத். 32:19
தேவன் கடுங் கோபங்கொண்டாலும், மோசேயை தண்டிக்காமல், *இரண்டாம் முறையும் அவரே எழுதி கொடுத்தார்*. உபா. 10:1-4, யாத். 34:27
ஆனால்,
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை இப்படி பரீட்சைப்பார்க்கிறார்களே என்ற கோபத்தில், (எண். 20:2-5)
மலையை பார்த்துப் *பேசு என்று தேவன் சொன்னதை மறந்து*, (எண். 20:8);
பழைய நினைவில், (யாத். 17:6)
மலையை அடித்ததால், (எண். 20:11)
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்குள் மோசேயை அனுமதிக்கவில்லை தேவன். (எண். 20:12)
தேவனுடைய கட்டளைகளை *தாங்கிச் செல்வதில் இருக்கின்ற பொறுப்பை காட்டிலும், அப்படியே கீழ்ப்படிவது* மிக அவசியம்.
கட்டளைக்கு மாறாமல் கீழ்படிவோம். வாக்குத்தத்தைச் இழந்துவிடாமல் சுதந்தரிப்போம்.
ஏனென்றால், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் அது நன்மையானாலும், தீமையானாலும், தேவன் கணக்கு வைத்துகொண்டு இருக்கிறார். பிர. 12:14
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக