*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 11 May 2021
by : Eddy Joel Silsbee
வியாதிகளிலிருந்து விடுதலையளிக்கும் சகல வல்லமை பொருந்திய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
உலகத்தின் முடிவு எப்போது வரும் என்று சீஷர்கள் அறிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். மத். 24:3
கிறிஸ்து பட்டியலிட்டவைகளில் ஒன்றை இக்காலங்களில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
எத்தனை ஆயிரம் விஞ்ஞானிகள் இருந்தும்
கோடிக்கணக்கான அறிவாளிகள் இருந்தும்
எண்ணுக்கடங்கா மருத்துவர்கள் இருந்தும்
அனைத்துலக நாடுகளும் கைகோர்த்தாலும் இன்று வரை
கொரோனா கிருமியை அழிக்க மருந்து இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் நவீன உலகத்தில் தான் நாம் இருக்கிறோம்.
குளிர் சாதனங்கள், மின்தூக்கி, சகல மருத்துவ வசதிகள், பிராணவாயு வழங்கும் கருவிகள், மின்சாரம் விட்டுப்போனால் அதை சீராக்கும் கருவி என்று சகல வசதியோடு 1000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் ஒரு மிகப்பொிய மருத்துவமனையை ஒன்பதே நாளில் கட்டி முடிக்கக்கூடிய சீனாவின் விஞ்ஞானம் மற்றம் தொழில் வளர்ச்சியை கண்டு உலகமே வியந்து போனாலும் உயிர் பிழைக்க வழியில்லாமல் விழிபிதுங்கி உலகமே அஞ்சி கொண்டிருக்கிறது.
மனித ஞானமும் அறிவும் தேவனுக்கு முன்பாக தூசியும் பைத்தியமுமாக இருக்கிறது. பிர. 2:12, ஏசா. 44:25, 1கொரி. 3:19
எந்த விக்கிரகமும், சிவப்பு நிறமும், பூஜைகளும் கம்யூனிஸமும் பரலோகத்திற்குள் எடுத்து செல்லாது.
கிறிஸ்து ஒருவரே அதற்கு வழி. கீழ்படியாதவர்களால் கொள்ளைநோய் வரும் என்று கண்டிருக்கிறோமே. யாத். 9:3, எரே. 34:17
இந்த கொள்ளை நோயிலிருந்து விடுபட உண்மையான தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும்படியாக தேவனிடம் மன்றாடுவோம்.
இரட்டுத்தி சாம்பலில் உட்கார்ந்து தங்களை தாழ்த்தினால் அவர்கள் மாத்திரம் அல்ல நாமும் தப்பித்துக்கொள்வோம். சங். 35:13
ஜனங்களுக்காக நம் முழங்கால்கள் முடங்கட்டும். 1இரா. 8:37-40
தேவன் தீர்வை தருவார். அவர் மாத்திரமே இந்த தீர்வைத் தர முடியும்.
ஆபகூக் 3ம் அதிகாரம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
எமது வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக