*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
கிருபை நிறைந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எத்தனை முறை ?
பத்தோ, நூறோ, ஆயிரமோ, இலட்சமோ கோடி முறை கூட இருக்கலாம். நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இத்தனை முறை கர்த்தரின் கட்டளையை நாம் மீறியிருக்கலாம்.
ஒவ்வொன்றுக்கும் முறையே, வரிசை வரிசையாக கணக்கு வைத்து ஆண்டவர் நமக்கு தண்டனையை கொடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்?
ஆனால், எதையுமே பெரிதாக நினைக்காமல், போகட்டும் போகட்டும் என்று இன்று வரை அவர் பொறுமையாய் இருந்து நம்மை பாதுகாக்கவும், தேவைகளை சந்திக்கவும் ஆசீர்வதித்தும் வருகிறார்.
பரத்துக்கு விரோதமாக நாம் செய்த எத்தனையோ பாவங்களை மன்னித்து, தேவன் நம்மை தண்டிக்காமல் விட்டார்.
ஆனால் நாமோ,
நமக்கு விரோதமாக செய்யபடும் இவ்வுலக மீறுதல்களை மற்றவர்களுக்கு மன்னிக்க யோசிக்கிறதாலேயோ என்னவோ எப்போதும் வீட்டில் சண்டையும், அழுகையும் பற்கடிப்பும் வியாதியும் வறுமையும் மீளமுடியாத கடன்களும் குடிகொண்டு இருக்கிறது..
எப்பொழுது ஜெபித்தாலும் நமக்கு தேவன் இறங்குவது போல, நாமும் மற்றவர்களின் மீது இருக்கும் பகையை மறந்து புன்னகையோடு எப்போதும் எல்லோரையும் பார்த்து உள்ளம் குளிர சந்தோஷமாய் எல்லோரிடமும் தயவாய் இருப்போம். மற்றவர்களுக்கு மாத்திரம் அல்ல நம்முடைய வாழ்வையும் ஆசீர்வாதமாக மாற்றும்.
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, .. அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் ... மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். மத். 18:33-35
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக