#1095 – *பரபாஸின் வரலாறு குறித்து எழுதவும்*.
*பதில்* : ஜனங்களின் கோரிக்கையை ஏற்று, பண்டிகையின் போது ஒரு கைதியை விடுதலை செய்வது அப்போதைய அரசாங்க வழக்கம். மத். 27:15
தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளும்படியாக, இயேசுவின் மேல் பொறாமைப்பட்டு அவரைக் காட்டிக்கொடுத்தார்கள் என்று அறிந்த பிலாத்து, விசாரணையின் மூலம் குற்றமற்றவர் என்ற தீர (3 முறை) அறிந்ததால், இயேசு கிறிஸ்துவை பண்டிகை நாளில் ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய பிரியப்பட்டான். மத். 27:17, யோ. 11:48, 18:38, 19:4, 6
ஆனால், பரபாசை விடுதலை செய்யவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். மத். 27:20
இந்த பரபாஸ் என்பவன், ஊருக்குள் கலகத்தை உண்டாக்கி, அந்த கலகத்தின் போது கொலை செய்த குற்றத்தில் தண்டனை பெற்று கொண்டிருப்பவன். மாற்கு 15:7
பரபாஸ் என்றால் அவமானத்தின் மகன் அல்லது அப்பாவின் மகன் அல்லது குழப்பவாதி என்று பொருள்.
பரபாசைக் குறித்து வேறு எந்த தகவலும் வேதத்தில் சொல்லப்படவில்லை.
அதே வேளையில், இந்த சம்பவத்தை ஒப்பனையாக்கி ஒரு செய்தியை இங்கு பகிர விரும்புகிறேன்.
நம்முடைய வாழ்க்கையில் பரபாசை காண்கிறோம். துயரத்திற்கும் சகல உலக வழக்கத்திற்கும் பிணைக்கப்பட்டு, நம்பிக்கை இழந்து (எபே. 2:12) நாம் கடவுளின் எதிரிகளாக நின்ற போது (ரோ. 5:8) ஒரு குற்றமும் செய்யாத பரிசுத்தரான இயேசு கிறிஸ்து நமக்காய் சிலுவையில் மரித்ததால், குற்றவாளி பரப்பாஸ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது போல நமக்கும் விடுதலை பெற்றுத் தந்தார்.
நாம் சுபாவத்திலேயே கோபாக்கினையின் பிள்ளைகள் (எபே. 2: 1-4).
விடுதலையோ மன்னிப்போ எந்த நம்பிக்கையுமின்றி நாம் பாவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். (எபே. 2: 8,9).
கிறிஸ்துவில் "அவருடைய இரத்தத்தின் மூலம் மீட்பையும், பாவ மன்னிப்பையும்" காண்கிறோம் (எபே. 1:7).
நமது சுதந்திரம் எவ்வாறு வழங்கப்படுகிறது? சிலுவையில் அவர் செய்த தியாகத்தால் நமக்கு இப்படியொரு விடுதலை கிடைத்தது. ஆம், இயேசு எனக்காக மரித்தார்! நம் ஒவ்வொருவருக்காகவும் மரித்தார்.
பரபாஸ் விடுவிக்கப்படுவதற்கு தகுதியானவன் அல்ல ஆனால், இயேசுவின் நிமித்தம் அவனுடைய குற்றத்திற்கு மன்னிப்பு வழங்கப்பட்டது போல, நமக்கும் பாவத்திலிருந்து இயேசுவின் கட்டளைக்கு கீழ்படிவதன் மூலம் குற்றம் மன்னிக்கப்படுகிறது (யோவான் 3:16).
பரப்பாஸுக்கு என்ன நடந்தது என்பதை வேதம் வெளிப்படுத்தவில்லை. அவர் மீண்டும் கொலை மற்றும் கொள்ளைக்குச் சென்றிருக்கலாம் அல்லது அவர் ஒரு சிறந்த மனிதராக மாறியிருக்கலாம்.
பராபாஸின் கதை பரபாஸ் என்ற மனிதனைப் பற்றியது அல்ல, ஆனால் இயேசு எவ்வாறு அந்த குற்றவாளியின் குற்றத்தை தன் மீது ஏற்றெடுத்தார் என்பதே.
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோ. 8:1
கிறிஸ்து ஒவ்வொரு மனிதனுக்காகவும் சாபமாக ஆனார் (கலா. 3:13).
தேவ ஆட்டுக்குட்டியின் பாவமறியாத பரிசுத்த இரத்தம், ஒரு மோசமான, பாவியான மற்றும் பொல்லாத மனிதனுக்கு பதிலாக கொட்டப்பட்டது. அதுதான் இரட்சிப்பு.
இந்த உலகத்தின் மோசமான, பாவமான மற்றும் பொல்லாத மக்களுக்காக இயேசு இறந்தார். நீங்களும் நானும் அந்த பரபாஸின் இடத்தில் நிற்கிறோம்.
கிறிஸ்துவின் கட்டளைக்கு முழுமையாக கீழ்படிந்து அப்பேற்பட்ட விலைமதிப்பில்லா இரட்சிப்பிற்குள் கடந்து வரவேண்டும். அப். 22:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
வியாழன், 22 ஏப்ரல், 2021
# 1095 – பரபாஸின் வரலாறு குறித்து எழுதவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக