*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே சகல மகிமையும் உண்டாவதாக.
*முழு இருதயத்தோடும்* நாம் தேவனை தொழுது கொள்ள வேண்டும்.
எங்கோ சிந்தனையை வைத்துக்கொண்டு,
ஏதோ கடமைக்கு மற்றவரோடு இராகத்துடன் சேர்ந்து பாடிவிட்டு,
ஜெபத்தை கவனிக்காமல்,
ஆமென் போட கூட தோன்றாமல்,
யோசனையை வேறு எங்கோ வைத்துவிட்டு...
“ஆண்டவரே என் தேவைகளை பூர்த்திசெய்யும்” என்று கூக்குரலிடும் போது அவரிடத்திலிருந்து பதில் உடனே வரும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
இந்தப் பாடலின் துவக்கத்தையும் முடிவையும் கவனியுங்கள் :
*முழு இருதயதோடும் உம்மை துதிப்பேன், தேவர்களுக்கு முன்பாக உம்மை கீர்த்தனம் பண்ணுவேன், உம்முடைய உண்மையின் நிமித்தமும், உமது கிருபையின் நிமித்தமும் உமது நாமத்தை துதிப்பேன் என்று சங்கீதக்காரன் கீழ்படிந்த போது (சங். 138:1-2) “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்று சொல்ல முடிந்தது..!! (சங். 138:8)
வைராக்கியத்தையும், சுயநலத்தையும் விட்டு, உண்மையாய் கிறிஸ்துவை சார்ந்திருப்போம்.
நம்முடைய தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக